New Page 1
வேளாளர் மாந்தர்க்கு
உழுதூண் அல்லது
இல்லென மொழிப்
பிறவகை நிகழ்ச்சி
என்று குறிப்பிட்டுள்ளார்.
இங்ஙனம் உழுதுண்டு வாழும் வேளாளர்கட்குள் உழுதுண்ணும் வேளாளர், உழுவித் துண்ணும் வேளாளர் என
இருவகையினர் இருத்தலின், அவர்களுள் சேக்கிழார் உழுவித்துண்ணும் மரபினருள் ஒருவர் என்பதை நினைப்பிப்பார்போல்
“ சேவையர் காவல “ என்றனர்.
அநபாயன் சைவனாக
இருந்தும், சமண நூலாகிய சிந்தாமணியில் ஈடுபட்டிருந்தான். அந்தோ ! புறச்சமய நூலைக் கேட்டால்
இம்மைக்கும் அம்மைக்கும் நன்மை ஏற்படாதே என்ற அருளுள்ளம் காரணத்தால் எண்ணிச் சிவனடியார்
வரலாற்றைக் கேட்குமாறு செய்த திருவுள்ளம் காரணமாகச் சேக்கிழார் ஆர் அருள் ஆகர என்று
கூறப்பட்டார்.
“ வளவனும்குண் டமண்புரட்டுத்
திருட்டுச் சிந்தா
மணிக்கதையை
மெய்யென்று வரிசை கூற
உளமகிழ்ந்து
பலபடப்பா ராட்டிக் கேட்க
உபயகுல மணிவிளக்காம்
சேக்கி ழார்கண்
டிளவரசன் தனைநோக்கிச்
சமணர் பொய்நூல்
இதுமறுமைக்
காகாதிம் மைக்கும் அற்றே
வளமருவு கின்றசிவ
கதைஇம் மைக்கும்
மறுமைக்கும்
உறுதிஎன வளவன் கேட்டு “
என்ற சேக்கிழார் புராணப்
பாடலையும் காண்க
(17)
|