பக்கம் எண் :

 

       காப்புப் பருவம்

25

தலைவர்.  அவர் திருத்தொண்டர்களிடத்தில்  இடையறா அன்பும் பக்தியும் கொண்டவர்.  ஆகவே, அவர்களையே சேக்கிழாராம் குழந்தையைக் காக்க வேண்டும் என்று காப்புப் பருவத்தில் அமைத்துக் கொண்டனர்.  அங்ஙனம் அமைந்த முறையில் சுந்தரர் பாடியுள்ள திருத் தொண்டத் தொகையில் உள்ள ஒவ்வொரு பாடலையும் தலைப்பாக வைத்து, அப்பாடலில் குறிக்கப்பட்ட அடியார்களைச் சேக்கிழாராம் குழந்தையைக் காக்க என்று வேண்டுவாராயினார்.  இதனை இக்காப்புப் பருவம் முற்றிலும் காணலாம்.

    திரு பிள்ளை அவர்கள், திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாண தேசிகர்மீது பாடிய பிள்ளைத் தமிழ்க் காப்புப் பருவத்திலும், பொது முறைப்படி காப்புக் கூறாமல், அகச் சந்தானம் புறச்சந்தானம் முதலான சைவ சித்தாந்தக் குரவர் பெருமக்களைக் காப்பாகப் பாடியுள்ளமையினையும் ஈண்டு நினைவு கூர்க.  ஆகவே, பிள்ளைத் தமிழில் ஒரு புது முறைக் காப்புப் பருவம் பாடிய பெருமையினால் போலும், திரு பிள்ளை அவர்களைப் பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று அழைத்தனர்.  இவரே பொதுமுறையினைக் கையாண்டு காப்புப் பருவம் பாடிய பிள்ளைத் தமிழ் நூல்கள் பல உள.

    பெரிய புராணம் என்பது பெருவழக்காயினும், திருத்தொண்டர் புராணம் என்பதே இந்நூலுக்கு உரிய பெயராகும்.  இதனைச் சேக்கிழாரே,

இங்கிதன் நாமம் கூறின் இவ்வுலகத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்துநின்ற
பொங்கிய இருளை ஏனைப் புறஇருள் போக்குகின்ற
செங்கதி ரவன்போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம்
                                      என்பாம்

என்று குறிப்பிட்டுள்ளனர்.

    திருத்தொண்டர் புராண வரலாற்றிலும் உமாபதி சிவம்,