பக்கம் எண் :

7

250

             செங்கீரைப் பருவம்

7.  புண்ணிய முதலே பொங்கொளி மணியே
      பொய்யாப் பெருவாழ்வே
  பொள்ளலில் முத்தே கள்ளமில் வித்தே
      புரையில் சுவைப்பாகே
  தண்ணிய அமுதே மண்ணியல் மதியே
      தமிழ்நா வலர்ஏறே
  சத்துவ நிதியே பொத்திய மலநோய்
      சாடு பெரும்பகையே
  எண்ணிய அன்பர் உளத்தமு தூற
      இனிக்கும் நறுந்தேனே
  என்றும் பத்தி ரசம்கனி கனியே
      எந்நா ளினும்எங்கட்
  கண்ணிய பொருளே ஆய்பவர் தெருளே
      ஆடுக செங்கீரை
  ஆரருள் ஆகர சேவையர் காவல
      ஆடுக செங்கீரை

    (அ. சொ) பொள்ளல்-துளை, புரை-குற்றம், மண்-நிலஉலகில், இயல்-விளங்கும், மதியே-சந்திரனே, நாவலர்-பேசும் ஆற்றலுடைய செந்நாவினைப் படைத்த அறிஞர்கள், ஏறே-தலைவரே.  சத்துவம்-நன்மையை நோக்கும், நன்மை வாய்ந்த, நிதியே-பொக்கிஷமே, பொத்திய-நிறைந்துள்ள, மலநோய்-ஆணவ கன்ம மாயைகளால் ஏற்பட்ட துன்பங்களை, சாடும்-அழிக்கும்,  நறுந்தேன்-மணமுள்ளதேன், அண்ணிய, நெருங்கியுள்ள, இனிக்கும்படியான தெருளே-அறிவாய் விளங்குபவரே.

    விளக்கம் : இச்செய்யுளைப் பாராயணம் செய்து கொண்டிருந்தாலே சேக்கிழாரது திருவருள் கிட்டும்.  சிவ பெருமானே அடி எடுத்துக் கொடுக்கத் தம் நூலைப்பாடத் தொடங்கினமையின் புண்ணிய முதல் ஆயினர்.  இவரது புகழ் மங்காது நிற்றலின், இவர் பொங்கொளிமணியே எனப்பட்