பக்கம் எண் :

New Page 1

252

             செங்கீரைப் பருவம்

மைக்கருள் கூந்தல் செவ்வாய் வாள்நுதல் ஒருத்தி உள்ளம்
நெக்கென உருகுகின்றாள் நெஞ்சிடை வஞ்சன் வந்து
புக்கனன் போகா வண்ணம் கண்ணெனும் புலங்கொள்
                                        வாயும்
சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள்

என்று கம்பர் பாடிய பாட்டால் மிதிலா நகரத்து மாதர்கள் பெரிதும் காம உணர்ச்சி உடையவர்கள் என்பதைப் பெற்றாம்.  இவ்வாறு மாதர்களைப்பற்றிக் கம்பன் கூறியிருப்பது ஒரு குற்றமாகச் சிலர் கருதுவர்.  சேக்கிழார் இவ்வாறான கட்டத்தைக் கூறும் போதும், சுந்தரரைக் கண்ட மாதர்கட்கு எந்தவிதமான காமக் குறிப்பும் தோன்றாத நிலையில் சுந்தரரைக் கண்டு புகழ்ந்தனர் என்பதை அழகுற,

        கண்கள்எண் ணிலாத வேண்டும்
            காளையைக் காண என்பார்
        பெண்களில் உயர நோற்றாள்
            சடங்கவி பேதை என்பார்
        மண்களி கூர வந்த
            மணம்கண்டு வாழ்ந்தோம் என்பார்
        பண்களில் நிறைந்த கீதம்
            பாடுவார் ஆடு வார்கள்

என்று பாடியுள்ளார்.  கம்பரைக் குற்றமுடையவராகக் கருதுவதற்கு இடம் இருப்பதுபோலச் சேக்கிழார் பாடலில் இல்லாமையில் இவர் பொள்ளலில் முத்துப் போன்றவர் என்பதில் ஐயம் உண்டா?

    ஆளுடைய நம்பிகள் சங்கிலியாரின் அழகைக் கண்டும் சொற்களைக் கேட்டும், வாய் அமுதமாம் முத்தம் உண்டும் உறுப்புக்களை மோந்து தழுவியும் இன்புற்று மகிழ்ந்திருந்தார்

என்பதைச் சிறிதும் ஒளிமறைவு இல்லாமல்,

பண்டுநிகழ் பான்மையினால் பசுபதிதன் அருளாலே
வண்டமிழ்பூங் குழலாரை மணம்புணர்ந்த வன்
                                    தொண்டர்