பக்கம் எண் :

புண

 

       செங்கீரைப் பருவம்

253

 

புண்டரிகத் தவள்வனப்பைப் புறங்கண்ட தூநலத்தைக் கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றமர்ந்திருந்தார் காதலினால்

என்று பாடியுள்ளார்.  இத்துடன் நிற்காமல் மேலும்,

        யாழின்மொழி எழில்முறுவல்
            இருகுழைமேல் கடைபிறழும்
        மாழைவிழி வனமுலையார்
            மணிஅல்குல் துறைபடிந்து
        வீழும் அவர்,

என்றும் பாடியிருத்தலைக் காணும்போது, சேக்கிழாரின் கள்ளமிலா உள்ளத்தைக் காணலாம். இவ்வாறே கள்ளம் கபடம் இன்றிப் பாடவேண்டும் என்பதற்கு விதை போட்டவர் ஆதலின், இவரை கள்ளமில்லா வித்தே என்றனர்.  குளிர்க்கு உடைந்து தலைவனும் தலைவியும் ஒன்று சேர்ந்து கட்டித் தழுவிப் படுத்திருந்தனர் என்பதை,

        நீடியஅப் பதிகள்எலாம்
            நிரைமாடத் துறையுள்தொறும்
        பேடையுடன் பவளக்கால்
            புலவொடுங்கப் பித்திகையின்
        தோடலர்மென் குழல்மடவார்
            துணைக்கலச வெம்முலையுள்
        ஆடவர்தம் பணைத்தோளும்
            மணிமார்பும் அடங்குவன

என்று இத்துணைச் சுவைபடப் பாடியுள்ளதால் இவரைப் புரையில் சுவைப் பாகே என்றனர்.

    பெரிய புராணக் கவிகள் படிக்கப் படிக்க அமுதுபோல இனிக்கும்படி இவர் பாடி இருத்தலின், தண்ணிய அமுதே எனப்பட்டனர்.  சேக்கிழார் தம் கவிகள் அஞ்ஞான இருளை நீக்கி மெய்ஞ்ஞான ஒளிக்கு இடமாய் இருக்கப் பாடி இருத்தலின், மண்ணியல் மதியே எனப்பட்டனர்.  குன்றைக் கோமகனார் சொல்வன்மையில் ஈடும் எடுப்பும் அற்றவர்.