பக்கம் எண் :

இத

254

             செங்கீரைப் பருவம்

இதனைத் திருமணப் பந்தலில் விருத்த வேதியராக வந்த இறைவருக்கும் நம்பியாரூரருக்கும் நடந்த பேச்சுவழி நன்கு உணரலாம், நம்பியாரூரர்.

ஆசில்அந் தணர்கள் வேறோர் அந்தணர்க் கடிமை ஆதல் பேசஇன் றுன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோய் என்றார், இதற்கு விடையாக வந்த முதியவர்,

பித்தனும் ஆக பின்னும் பேயனும் ஆக நீயின்று
எத்தனை தீங்கு சொன்னா யாதுமற் றவற்றால் நாணேன்
அத்தனைக் கென்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று
வித்தகம் பேசவேண்டா பணிசெய்ய வேண்டும் என்றார்

இங்ஙனம் பாடிய பாடல்கள் வழி, சேவையர்காவலர்  நாவலர் ஏறு என்பதில் தடையுண்டோ?

    சேக்கிழார் எவரும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் நிலையினர் ஆதலின், பொள்ளலில் முத்தே எனப்பட்டார்.  மன்னனுக்குத் தம் கருத்தில் பட்டதைக் கூறி அவகதையினைக் கேளாதவாறு செய்து சிவ கதையினைக் கேட்குமாறு செய்ததனால் கள்ளமில் வித்தே எனப்பட்டார்.  சேக்கிழாரை எண்ணினும் அவர் திருப் பெயரைக் கூறினும் இனித்தல் பற்றி, சுவைப்பாகே எனப்பட்டார்.  இவரது பாடல்களைப் படித்து வந்தாலே அவைகள் இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை தந்து அமுதுபோல் சாகாமைக்கு வழி காணுதலின் அமுதே எனப்பட்டார், வானத்தன்றி மண்ணில் மதியென மிளர்தலின் மதியே எனப்பட்டார்.  தமிழ்ப் புலவர்கட்கு எல்லாம் தலைவராய் வைத்துப் போற்றப்படுதலின் நாவலர் ஏறே எனப்பட்டார்.  நன்மைதரும் சொற்களைத் தம் நூலில் பெய்திருப்பதனால் சத்துவ நிதியே எனப்பட்டார்.  இவரது நூல் மும்மலங்களை நீக்கவல்லது ஆதலின் மலநோய் சாடும் பெரும்பகையே எனப்பட்டார்.  இவர் மும்மலங்களும் நீக்கிய பெரியார் ஆதலின் இங்ஙனம் கூறப்பட்டார்.  இதனை இவரே செய்வண்ணத்திறம் மொழிவேன், தீவினையின் திறம் ஓழிவேன்   என்றதனாலும்   அறியலாம்,  அன்பர்கட்கு இனிமையானவர் பற்றி நறுந்தேனே எனப்பட்டார்.  பத்திச்