பக்கம் எண் :

சு

 

       செங்கீரைப் பருவம்

255

சுவை நனிசொட்டச் சொட்டக் கவி பாடியவர் ஆதலின், பத்திரசம் கனி கனியே எனப்பட்டார்.  அன்பர்கட்கு அண்மையராய் இருந்து இனிமை அருள்பவர் ஆதலின், அண்ணிய பொருளே எனப்பட்டார்.  இவர் தம் நூலை ஆராய்பவர்கட்கு, இவர் அறிவு விளக்காய் இருந்து ஒளி தருதலின் ஆய்பவர் தெருளே எனப்பட்டார் இவ்வாறெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் பெருமைக்குரியவர் சேக்கிழார்.  இங்குக் கூறப்பட்ட தொடர்கட்குரிய பொருளை மேலே வரும் இடங்களில்   இன்னமும்   விரிவாக  எழுதப்படும்.    ஆண்டு ஆண்டுக் காண்க.                                  

(18)

 8.  சூழியம் மேவிய கொண்டை விளங்கத்
       தொட்டுக் கட்டியபொன்
   சுட்டி இலங்கப் புண்டர நீறு
       துதைந்து நிலாக்கால
   வாழிய கனிவாய் ஊறல் தேறல்
       மார்பில் வழிந்தோட
   வடிகா தில்புனை குழையில் செவ்விய
       மணிஇள வெயில்வீச
   வீழிய வாவிய வாய்இள முறுவல்
       விளங்க அரைப்பொன்நாண்
   மின்னுக் காலப் பேரெழில் நோக்குநர்
       விழிகள் வீருந்துசெய
   வாழிய அன்பர் அகத்தமர் செஞ்சுடர்
       ஆடுக செங்கீரை
   ஆரருள் ஆகர சேவையர் காவல
       ஆடுக செங்கீரை

    (அ. சொ.) சூழியம்-உச்சியில் குழந்தைகட்கு  அணியும் ஒருவகை ஆபரணம், சுட்டி-நெற்றியில் அணியும் ஆபரணம், இலங்க-விளங்க, புண்டரநீறு-திரிபுண்டரமாக