New Page 1
நெற்றியில் அணியும் திருநீறு,
துதைந்து-மிகுந்து, நிலா-ஒளியை, கால-வீச, ஊறல் குழந்தைகள் வாயினின்று ஒழுகும் உமிழ்நீர், தேறல்-தேன்,
வடிகாது-தொங்கும் காது, புனை-தரித்த, குழையில்-காதணியிலிருந்து, வெயில்-ஒளி, வீழி-விழுத்திப்பழம்
வீழிப்பழம், அவாவிய-விரும்பிய, முறுவல்-புன்னகை, அரை-இடையில், நாண்-கயிறு, மின்னு-ஒளி,
கால-வீச, எழில்-அழகை, விருந்து-புதுமை, அகத்து-உள்ளத்தில், சுடர்-ஒளியே.
விளக்கம் :
ஈண்டுச் சேக்கிழார் பெருமானார் குழந்தைப் பருவத்தில் இருக்கும் காட்சியே கவினுறக் கூறப்படுகிறது.
இக்குழந்தை எல்லா அணிகலன்களை அணிந்திருப்பினும், திரு நீறாகிய காப்பையும் அணிந்திருப்பதுதான்
சிறப்பினும் சிறப்பாகும். எந்நிலையில் இருப்பினும் எக்கோலம் கொள்ளினும் திருநீற்றுக்
காப்பு அணிவதில் மறதி இருத்தல் கூடாது. சுந்தரர் நரசிங்கமுனை அரையர் என்னும் மன்னனது வளர்ப்புப்
பிள்ளையாக வளர்க்கப் பட்டவர். அந்நிலையிலும் தம் வைதிக ஒழுக்கத்திலிருந்து சிறிதும்
ஒருவிலர். இதனை,
மன்னவர் திருவும்
தங்கள் வைதிகத் திருவும் பொங்க
நன்னகர் விழவு
கொள்ள நம்பிஆ ரூரர் நாதன்
தன்னடி மனத்துள்
கொண்டு தகுந்திரு நீறு சாத்திப்
பொன்னணி மணியார்
யோகப் புரவிமேல் கொண்டு
போந்தார்
என்று பெரியபுராணம்
கூறுதல் காண்க.
திருநீறு ஒளியுடையது.
அவ்வொனி நில ஒளிபோல் தண்ணிய ஒளி தரவல்லது. இதனைச் சேக்கிழார், “ அண்ணல் வெண்ணீற்றொளி
போன்றது நீண்நிலா “ என்றே கூறியுள்ளார். இக்கருத்துப் பொதுளவே ஈண்டு “ புண்டர நீறு துதைந்து
நிலாக்கால “ எனப்பட்டது. குழந்தைகளின் வாய் செவ்விய வாய் ஆகவே “ கனிவாய் “ என்றனர்.
“ பூநாறும் செய்யவாய் “ என்றனர் புகழேந்தியார். குமர குருபரர் குழந்தையின் வாய் நீரை “ மழவுமுதிர் கனிவாய்ப்
|