| 
பசுந
 
பசுந்தேறல்
விரல்சுவை உண்டு கனிந்த முதூறிய மேல் இதழ் “ என்றனர்.  எனவே, ஈண்டு, கனிவாய் ஊறல் தேறல் எனப்பட்டது. 
    சேக்கிழார் 
பெருமானார் எழில் அதில் ஈடுபட்டவர்கள் கண்களுக்குப் பெருவிருந்தாய் இருந்தது என்றது உண்மை.  
வெறும் புகழ்ச்சி இல்லை.  இதனை உமாபதி சிவம், 
வாரணத்தில் இவரைவரக் 
கண்டதிரு வீதி   ( நாட்டிப் 
    மறுகுதொறும் தூய்மைசெய்து 
வாழைகளும்   
பூரணகும் பமும்அமைத்துப் 
பொரியும்மிகத் தூவிப் 
    பொன்அரிமா லையும்நறும்பூ 
மாலைகளும் தூக்கித் 
தோரணங்கள் நிரைத்துவிரை 
நறும் தூபம் ஏந்திச் 
    சுடர்விளக்கும் ஏற்றிஅணி 
மணிவிளக்கும் ஏந்தி 
ஆரணங்கள் விரித்தோதி 
மாமறையோர் எதிர்கொண் 
    டறுகெடும்ப வாழ்த்தெடுத்தார் 
அரம்பையர்கள்  
                                        எல்லாம் 
என்றும், 
    மின்மழை பெய்தது 
மேக ஒழுங்குகள் 
        விண்ணவர் கற்பக 
விரைசேர்பூ 
    நன்மழை பெய்தனர் 
சேவையர் காவலர் 
        நாவலர் இன்புற 
நாவாரச் 
    சொன்மழை பெய்தனர் 
இரவலர் மிடிகெட 
        அள்ளி முகந்தெதிர் 
சோழேசன் 
    பொன்மழை பெய்தனன் 
உருகிய நெஞ்சொடு 
        கண்மழை அன்பர் 
பொழிந்தார்கள் 
என்று குறிப்பிட்டிருப்பது 
கொண்டு தெளியலாம்.  இது பற்றியே  “ பேர் எழில் நோக்குநர் விழிகள் விருந்து செய “ எனப்பட்டது. 
    இங்குச் சேக்கிழார் 
விளங்கும் தோற்றத்தைப்போலவே நம் முத்துக்குமரனும் விளங்கிய நிலையை நம் குமரகுருபரர் 
பாடியிருப்பதையும் அறிதல் நலமே யாகும். 
 |