New Page 1
குழையொடு குழைஎதிர்
மோதிக் காதணி
குண்டலம் வெயில்
வீசக்
குமுத இதழ்க்கனி
வாயமு தூறிய
குறுநகை நிலவூர
முழுவயி ரம்புய
வலயமு முன்கை
முதாரியும் ஒளிகால
முத்தம் அரும்பி
எனக்குறு வேர்வு
முகத்தில்
அரும்பியிடப்
புழுதி அளைந்த
பசுந்திரு மேனிப்
பொங்கொளி
பொங்கிஎழப்
புண்டரி கங்கள்
மலர்ந்த விழிக்கடை
பொழிஅருள்
கரைபுரள
அழகு கனிந்து முதிர்ந்த
இளங்கனி
ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத
புரிக்குகன்
ஆடுக செங்கீரை
சேக்கிழார்
பெருமானார் அடியார்தம் அகத்தில் ஞான சூரியனாய் எழுந்தருளி, அவர்தம் அஞ்ஞான இருளை நீக்குகின்றமையின்,
அவரை ஈண்டு அன்பர் அகத்தமர் செஞ்சுர் என்றனர். இவர் நூல் இங்ஙனம் அகஇருளை நீக்கவல்லது
என்பது,
இங்கிதன் நாமம் கூறின்
இவ்வுல கத்து முன்னால்
தங்கிருள் இரண்டில்
மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப்
புறஇருள் போக்கு கின்ற
செங்கதி ரவன்போல்
நீக்கும் திருத்தொண்டர் புராணம்
என்பாம்
என்ற பெரியபுராணப் பாட்டாலும்
நன்கு தெரிய வருகின்றது. அவரது புராணமே இங்ஙனம் அக இருளைப் போக்கவல்லதாயின், அவர் போக்கவல்ல
ஞான சூரியர் என்பதைக் கூறவேண்டா அன்றே !
உமாபதி
சிவாசாரியார் “ செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார் அடிபோற்றி “ என்றும், வடநூல் கடலும்
தென்னூல் கடலும் நிலைகண்டுணர்ந்த சிவஞான முனிவர்,
|