New Page 1
சேண்தகைய திருத்தொண்டர்
புராணம்எனப்
புராணத்
திருமுறைக்குத் திருநாமம்
சீர்மைபெற
அமைத்திட்டு
எனக் கூறியுள்ளனர்.
இதனால்தான் “பார்கொண்ட தொண்டர் வரலாறு சொல் புராணம்” எனப்பட்டது.
பார் என்பது
உலகம். உலகம் என்பது உயர்ந்தவர்களைக் குறிக்கும். “ உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று”
என்பது தொல்காப்பியம். ஆகவே, உயர்ந்தவர்களால் சிறப்பாகக் கொள்ளப்பட்ட நூல் ஆதலின்,
“ பார்கொண்ட தொண்டர் வரலாறு சொல் புராணம்” என்றார். அல்லது பார்கொண்ட என்பதைத் தொண்டர்
மீது ஏற்றிக் கூறினும் அமையும்.
சேக்கிழாரே
நூல் முழுதும் பாடி இருப்பினும், அங்ஙனம் பாடுதற்குத் துணையாய் இருந்தது கூத்தப்பெருமான் திருவருள்
காரணம் ஆதலின், “ அம்பலவர் அருளால் அமைந்தபடி” எனப்பட்டது.
உலகெலாம் என்பது
இறைவன் திருவாக்கு. ஆகவே, அது வேதம் ஆயிற்று. உலகெலாம் என்பதில் முதலில் உவும் ஈற்றில்
‘ம்’ மும் இருத்தலை வெளிப்படையாகவும் ‘அ’ எனபது ல கர ஒற்றில் மறைவாகவும் அமைந்தது அ, உ,
ம் என்னும் பிரணவ எழுத்துக்களைக் கொண்டு, பிரணவ வடிவில் இருத்தலை உய்த்து உணர்தல் வேண்டும்.
இப்பிரணவம் அருமறையில் முதல் இடை கடைகளில் பொருந்தி இருக்கிறது.
அங்ஙனமே பெரிய
புராணமாம் சுருதியின் முதலிலும், இடையிலும், கடையிலும் உலகெலாம் என்னும் வேத மொழி அமைந்திருத்தலைத்
தொண்டர் புராணத்தில் காணலாம். நூலின் முதலில் அமைந்திருத்தலை,
உலகெ லாம்உணர்ந்
தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி
வேணியன்
அலகில் சோதியன்
அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி
வாழ்த்தி வணங்குவாம்
|