| 
New Page 1
 
        கோமான்நின் 
திருக்கோயில் 
            தூகேன்மெழுகேன் 
கூத்தாடேன் 
        சாமாறே விரைகின்றேன் 
            சதுராலே 
சார்வானே “  
என்பது திருவாசகம். 
    இச் சரியை மார்க்கத்தில் 
ஈடுபடுக என்று தம் நெஞ்சுக்கு அப்பர் அறிவுறுத்திய அறவுரையினையும் ஈண்டுக் காண்க. 
    நிலபெறுமாறு எண்ணுதியேல் 
நெஞ்சே நீவா 
        நித்தலும்எம் 
பிரானுடைய கோயில் புக்குப் 
    புலர்வதன்முன் அலகிட்டு 
மெழுக்கும் இட்டுப் 
        பூமாலை புனைந்தேத்திப் 
புகழ்ந்து பாடித் 
    தலையாரக் கும்பிட்டுக் 
கூத்தும் ஆடிச் 
        சங்கராசய 
போற்றி போற்றி என்றும் 
    அனைபுனல்சேர் செஞ்சடைஎம் 
ஆதி என்றும் 
        ஆரூரா என்றென்றே 
அலறா நில்லே 
இது அப்பர் வாக்கு. 
     கிரியையாவது 
(சத்புத்திர மார்க்கம்) மேலே கூறப்பட்ட சரியையானது முதிர்ந்து வரவர, இறைவனது நுண் வடிவே 
பொருளென்றும், பருவடிவம் அதனை வழிபடுதற்குரிய திருமேனி என்றும் உணர்ந்து அகத்தாலும் புறத்தாலும் 
ஆகமநெறிப்படி வழிபடுவதாகும்.  சுருங்கக் கூறின் அகத்தொழில் புறத்தொழில் இரண்டினாலும் சிவனது 
அருவுருவத் திருமேனியாகிய இலிங்கத்தை வழி படுவதாகும்.  இதுவே பொருள் என்பதை, 
புத்திரமார்க் கம்புகலில் 
புதியவிரைப் போது 
    புகையொளிமஞ் சனம்அமுது 
முதல்கொண்டைந்து 
சுத்திசெய்தா சனமூர்த்தி 
மூர்த்தி மானாம் 
    சோதியையும் பாவித்தா 
வாகித்துச் சுத்த 
பத்தியினால் அருசித்துப் 
பரவிப் போற்றிப் 
    பரிவினொடும் எரியில்வரு 
காரியமும் பண்ணி 
நித்தலும்இக் கிரியையினை 
இயற்று வோர்கள் 
    நின்மலன்தன் 
அருகிருப்பர் நினையும் காலே 
 |