நன
நன்மார்க்க ஞானத்தை
நாடி ஞான
ஞேயமொடு ஞாதிருவு நாடா
வண்ணம்
பின்மார்க்கச் சிவனுடனாம்
பெற்றி ஞானப்
பெருமையுடை யோர்சிவனைப்
பெறுவர் காணே
என்று கூறுகிறது.
வாதவூரர் புராணம்
இதனை அறிவிக்கும்போது,
பரந்த வான்கலை
முழுதுமா கமநூல்
பகுதி யும்பல
சமயசாத் திரமும்
தெரிந்து தேர்ந்ததில்
வாய்ந்தமுப் பொருளின்
செய்தி யேபொருள்
எனமனம் தெரிந்து
புரிந்து போந்துள
சிற்றறி வனைத்தும்
போக்கி அவ்வறி
வெனச்சிவ போதம்
விரிந்து தோன்றுநெஞ்
சுடையவித் தகரே
மேன்மை யானநம்
மெய்ப்பதம் பெறுவார்
என்று கூறுகிறது.
ஆக, இவையே சரியை,
கிரியை, யோகம், ஞானம் இன்ன என்பவை. இந்நால்வகை நெறிகளையும் மேற்கொண்ட நாயன்மார்கள்
யாவர் என்பதை எடுத்து மொழிந்த பெருமை சேக்கிழார் பெருமானார்க்கு இருந்தமையால் இவர் “ சரியை *** ஞான
இயல்பினர் “ என்று கூறிப் பாராட்டினர். இக்கருத்துக்கு எடுத்துக்காட்டாக நாயன் மார்களுள்
சிலரைக் காண்போமாக.
கணம்புல்ல நாயனார்
இறைவர்க்குத் திருவிளக்கிட்டுத் தொண்டு செய்த சரியை நெறியினர். இதனைச் சேக்கிழார்,
“ தாவாத பெருஞ்செல்வம் தலைநின்ற பயனிது என்று ஓவாத ஒளிவிளக்குச் சிவன் கோயில் உள்
எரித்து நாவாரப் பரவுவார் “ என்று குறிப்பிட்டனர். சரியை மார்க்கத்தினர்க்கு விளக்கெரித்தலும்
ஒரு நெறியாகும். இதனைச் சரியையின் இலக்கணம் கூறிய இடத்துக் காண்க.
கிரியா நெறிக்கு
உரியவராகக் குங்கிலியக் கலைய நாயனாரைக் குறிப்பிடலாம். கிரியா நெறியினர் தூபம் இடுவர்
என்பது முன்னர் விளக்கப்பட்டது.
|