பக்கம் எண் :

கண

 

       செங்கீரைப் பருவம்

269

கண்டு நாயனார் திடுக்கிட்டு, இறைவர் முன்வந்து,  “ அடிகள் நீர் தந்த கோவணத்தை வைத்திடத்து நான் கண்டிலன்.  மற்றும் ஓர் இடத்தில் உய்த்து ஒளித்தனர் இல்லை.  அஃது ஒழிந்தவாறு அறியேன் “  என்று கூறியதால், இவர் கவர்மனம் ஒழியவர் என்பது தெரிகிறது.  இனி, கவர் என்பதற்கு வசப்படுதல் எனப்பொருள் கண்டு, மனத்தைக் கவரும் மொழிபேசுபவர் எனினும் பொருள் காணலாம், அதுபோது அத்தொடர் கவர்மன மொழியிவர் என்று ஆகும்.

    பிரம்மசரிய நிலையினை மேற்கொண்ட நாயனார் சண்டேசுரர் ஆவார்.  அவர் அந்நிலையினர் என்பதை,

        அன்பு புரியும் பிரமசா ரிகளும்
            மூழ்கி அரனார்க்கு
        முன்பு போல மணல்கோயில்
            ஆக்கி முகைமென் மலர்கொய்து
        பின்பு வருஆன் முலைபொழிபால்
            பெருகும் இடங்கள் பேணும்இடம்
        தன்பால் கொணர்ந்து தாபித்துப்
            பிறவும் வேண்டு வனசமைத்தார்

என்ற சேக்கிழார் வாக்கால் அறியலாம்.

    சிவ வேடத்தையே மெய்ப் பொருளெனக் கொண்டவர் மெய்ப்பொருள் நாயனார்.  இவரைப் பற்றிச் சேக்கிழார் குறிப்பிடும்போது,  “ மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் எனத் தொழுது வென்றார் “  என்றே பாடியுள்ளார்.

    மேலும், சேக்கிழார் பெருமானார் நாயன்மார்களின் செயல்களையும் ஒழுங்காகக் குறிப்பிட்டுப் போந்தார்.  தில்லைவாழ் அந்தணர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, அந்தணர்கட்குரிய செயல்களாகிய வேள்வி வேட்டலும், நான்கு வேதம், ஆறங்கம் முதலியவற்றைப் பயிலுதலும் ஆகிய செயல்களைத் தெளிவாக,

        வருமுறை எரிமூன் றோம்பி
            மன்னுயிர் அருளால் மல்கத்
        தருமமே பொருளாக் கொண்டு
            தத்துவ நெறியில் செல்லும்