அ
அருமறை நான்கி
னோடா
றங்கமும்
பயின்று வல்லார்
திருநடம்
புரிவார்க் காளாம்
திருவினால்
சிறந்த சீரார்
என்று செப்பிச் சென்றார்.
இவ்வாறே ஏனைய நாயன்மார்களின்
செயல்களைக் கூறிச் சென்றிருப்பதைப் பெரிய புராணத்தில் பரக்கக் காணலாம். சிவனடியார்களின்
செயல்களைக் கருதுதர்க்கு அரிதரதலின், “ கருதரும் இவர் “ என்றனர்.
இவ்வாறெல்லாம் சேக்கிழார்
பெருமானார் தம்பேரருள் காரணமாகப் பேசிய திறனை நோக்குமிடத்துத் தில்லை நடராசப் பெருமானே
சேக்கிழார் உணர்வில் கலந்து இந்நுட்பங்களை அறிவித்தனர் போலும் என்ற குறிப்பினையே ஈண்டுத்
திருபிள்ளை அவர்கள், “ அவனே (இறைவனே) உலகறியச் சாற்றியபடி என்ன “ என்று கூறி அருளினர்,
(20)
10. நந்தி வரைத்தலை
ஒருமுனி சுரபி
நயக்கப்
பொழிதீம்பால்
நதியாய் அங்கங்
கோடுபு கூபம்
நயம்கிளர்
எரிகுளம்
முந்தி எழுங்கால்
ஓடை தடாகம்
முதல்பல வும்நிறையா
முழுத்த
சுவைப்பால் ஆக்குபு பின்னும்
மூரிக்
கடல்புக்கும்
புந்தி அவாவ நிரம்பலில்
மாயோன்
புரிகண்
துயிலும்இடம்
புகலிது வோஅது
வோஎன ஆயப்
பொலிதண்
டகநாட
அந்தி மதிச்சடை
அண்ணற் கினியவ
ஆடுக செங்கீரை
ஆரருள் ஆகர சேவையர்
காவல
ஆடுக செங்கீரை
(அ. சொ.)
நந்திவரைத்தலை-நந்தி என்னும் பெயரையுடைய மலையிடத்தில், (நந்திதுர்க்கம், நந்திமலை) ஒரு
|