பக்கம் எண் :

கழ

272

             செங்கீரைப் பருவம்

   கழிந்த பற்றுடை வசிட்டன
            திருக்கையாக் கவிஞர்
        மொழிந்த நந்தியம் பெருவரை
            மொய்த்தசூல் முகில்கள்
        பொழிந்த சீதநீர் பொற்புறு
            சாடியில் பொங்கி
        வழிந்த பாலெனத் திசைதொறும்
            இழிந்தன மன்னோ

என்று கூறுகிறது.

    இவ்வாறே காஞ்சி புராண ஆசிரியரும்,

கனைபெயல் எழிலிக் கூட்டம் கவிவீசும் பகடு போழ்ந்த
நனைமுடி நந்திக் குன்றம் நளிபடப் பொழியும் தெண்ணீர்
புனைமறை வசிட்ட மேலோன் செருத்தல்ஆன் பொழிந்த
                                            தீம்பால்
வனைபுகழ் வெள்ளம் என்னத் திசைதொறும் வழிந்த
                                        மன்னோ

என்று கூறியுள்ளார்.

    ஆற்று நீர் பல இடங்களில் தன் நீரை நிறைத்துச் செல்லும் இயல்பினைக் கம்பர்,

        தாதுகு சோலை தோறும்
            சண்பகக் காடு தோறும்
        போதவிழ் பொய்கை தோறும்
            புதுப்புனல் தடங்கள் தோறும்
        மாதவி வேலிப் பூக
            வனம்தோறும் வயல்கள் தோறும்
        ஓதிய உடம்பு தோறும்
            உயிர்என உலாய தன்றே

என்றனர்.

    இவ்வாறெல்லாம் பாலாறு பாய்ந்து திருப்பாற் கடலில் புகுந்து, தானும் திருப்பாற் கடல்போல இருந்தமையின் எது திருமால் பள்ளி கொள்ளும் திருப்பாற் கடல் என்று மக்களால் அறிய ஒண்ணா நிலையில் இருந்தது என்பதை