பக்கம் எண் :

 

       செங்கீரைப் பருவம்

273

விளக்கவே,  “ மாயோன் புரிகண் துயிலும் இடம் புகலிதுவோ அதுவோ “ என்றனர்.

    சேக்கிழார் சிவபெருமானுக்கு இனிமையானவராக இருந்தனர்.  சேக்கிழார்பால் இறைவர் இனியராக இருக்கவில்லை என்றால்,  “ சேக்கிழான் நமது தொண்டர் சீர்பரவ நாம் மகிழ்ந்து உலகம் என்று வாக்கினால் அடி எடுத்து உரைத்திட வரைந்து நூல் செய்து முடித்தனர், காக்கும் வேல் வளவ நீ இதைக் கடிதுகேள் “ என்று சோழனுக்குக் கூறுவரோ? ஆகவே, ஈண்டுச் சேக்கிழார்,  “ அண்ணற்கு இனிய“ என்று விளக்கப்பட்டார்.

    தண்டகநாடு, தொண்டை நாடு, அந்நாடு தண்டக நாடு எனப்பட்டதற்குரிய காரணம் பின்வருவது.

        முக்கணான் கணநா தர்க்கு
            முதன்மைத்துண் டீரன் ஆண்டு
        மிக்கதுண் டீரன் நாடாய்த்
            தண்டக வேந்தன் தாங்கித்
        தக்கதண் டகன்நன் நாடாய்த்
            தமனன்மா குலத்துச் சோழன்
        தொக்கதார்த் தொண்ட மான்காத்
            தாயது தொண்டை னாடே

என்னும் சதகச் செய்யுளால் துண்டீரனால் ஆளப்பட்டபோது துண்டீர மண்டலம், துண்டீரபுரம் என்றும், பின்னர்த் தண்டகண் ஆட்சி செலுத்தியபோது தண்டக நாடு, தண்டகபுரம் என்றும், அதன்பின் ஆதொண்டன் ஆட்சிக் காலத்தில் ஆதொண்ட மண்டலம், தொண்ட மண்டலம் என்றும் பெயர் பெற்றதை உணர்க.

        தன்னையே வேண்டித் தழல்மகம் செய்யத்
            தண்டகற் கெண்திசை அரசு
        தன்னைஈந் திடலால் தண்டக புரமாம்
            தனிப்பெயர் பெற்றது அத்தனியூர்

என்னும் கந்தபுராணப் பாடலும் இதற்குச் சான்றாகும்.             

(21)