பக்கம் எண் :

New Page 1

 

       தாலப் பருவம்

277

பேதம், விசயம், நிச்சுவாசம் சுவாயப்புவம், அனலம், வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகலிம்பம் புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம் சர்வோக்தம் பாரமேசுரம், கிரணம், வாதுளம் என இருபத்தெட்டாகும்.  இவற்றுள் நந்திபெற்ற ஆகமங்கள் ஒன்பது.  அவை இன்ன என்பதைத் திருமந்திரம்,

        பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
        உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
        மற்றவ் வியாமள மாகும்கா போத்தரம்
        துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே

என்று குறிப்பிடுகிறது.

    ஆகமம் மந்திரம், தந்திரம், சித்தாந்தம் என்ற சொல்லாலும் குறிக்கப்பெறும்.  அறிவன் நூல் என்றும் இதனைக் கூறுவர்.  இது மந்திரக் கலை, தந்திரக் கலை, உபதேசக் கலை என மூன்று வகைப்படும்.  இவ்வாமம் ஞானபாதம், யோக பாதம், கிரியா பாதம், சரியா பாதம் என்று தனித்தனி நான்கு பாதங்களையுடையது.

    ஞானபாதமாவது பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் தன்மைகளையும், யோகபாதம் பிராணாயாமம் முதலிய அங்கங்களோடு கூடிய சிவயோகத்தையும், கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரம், சந்தியா வந்தனம், பூசை, செபம், ஓமம் என்பனவற்றையும், சமய விசேட நிருவாண ஆசாரிய அபிடேகங்களையும், சரியாபாதம் சமயாசாரங்களையும் அறிவிக்கும்.

    இருபத்தெட்டு ஆகமங்கள் சிவ பேதம் என்றும், ருத்ர பேதம் எனவும் இருவகைப்படும்.  சிவ பேதம் ஒன்பது.  ருத்ர பேதம் பத்தொன்பது. 

    சிவயோகிகள் கூறும் (திருமூலரும் குறிப்பிடும்) ஒன்பது ஆகமங்களுள் சிவ பேதத்தில் அடங்கியவை காரணம்