| 
க
 
காமிகம், சிந்தியம், 
சுப்ரம் என்பன.  ருத்ர பேதத்தில் அடங்கியவை வீரம், வாதுளம், காலோத்தரம், மகுடம் என்பன ;  
இவ்வொன்பது குருபரம்பரையில் பெற்றவை.  இவ்வொன்பான் ஆகமங்களை இறைவன் இன்னின்னார்க்கு 
உபதேசம் செய்தான் என்பதைத் திருமூலர், 
    
சிவமாம் பரத்தினில் 
சத்தி, சதாசிவம் 
    உவமா மகேசர், 
உருத்திர தேவர், 
    தவமால், பிரமீசர் 
தம்மில்தாம் பெற்ற 
    நவஆ கமம் 
என்று அறிவித்தனர். 
    ஆ-பாசம் க-பசு, ம-பதி 
என்று பொருள் படுதலின், முப்பொருளை உணர்த்தும் நூல் ஆகமம் என்பதாயிற்று.  அன்றி, ஆ-சிவஞானம், 
க-மோட்சம், ம-மலநாசம் என்றும் பொருள் படுதலின் ஆன்மாக்களின் மலத்தை நாசம் பண்ணி, சிவஞானத்தைத் 
தோற்றுவித்து மோட்சத்தைக் கொடுத்தல் பற்றி ஆகமம் என்ற பெயரைப் பெற்றது எனினும் ஆம். 
    ஆகமம் அறிவனூலும் 
ஆகும்.  இதனை  “ ஆகமம் என்பது மனுமுதலாகிய அறனொடு புணர்ந்த திறன் அறிநூலே “  என்ற தண்டி 
அலங்கார நூற்பாவால் தெளிக. 
    இன்னோரன்ன ஆகமம் 
பற்றிய பேர் அறிவினைச் சேக்கிழார் பெருமானார் பெற்றவர் ஆதலின்,  “ சகலாகம பண்டித “  
என்றனர்.  வேதசாத் திரங்களைப் பயின்றவர் என்ற பொருளையும் இத் தொடர்க்குக் காண்க.  
ஆகமம், வேதம் என்ற பொருளையும் உடையது. 
    
சேக்கிழார் 
பெருமானார் சகலாகம பண்டிதர் என்பதற்குரிய அகச்சான்றுகள் பல அவர் யாத்த பெரியபுராணத்தில் 
பரந்து கிடக்கின்றன.  தில்லைவாழ் அந்தணர்கள் புராணத்து 
 |