பக்கம் எண் :

அவர

 

       தாலப் பருவம்

279

அவர்கள் இயல்பைப் பற்றிக் கூறவந்த இடத்து அவர்கள்  “ ஞானமே முதலா நான்கு நவையறத் தெரிந்து மிக்கார் “  என்று கூறியருளினர்.  இவ்வந்தணர்கள் சிவதீட்சை பெற்றுச் சைவ ஆகமங்களை ஓதி உணர்ந்து, அவைகளால் அறிவிக்கப்படும் நான்கு பாதங்களையும் அனுட்டிப்பவர் என்பதை மேற்கூறிய அடியில் விளக்கினர் என்றால், இவர் ஆகம அறிவு பெறாது விளக்கி இருக்க முடியுமோ? முழுநீறு பூசிய முனிவர் புராணத்து நீற்றின் தன்மைகள் கூறியிருப்பதைக் காணும் இடத்து, இவருக்கு இருந்த சகலாகம அறிவு வெள்ளிடை மலை என விளங்கா நிற்கும்.  ஆகவே, இவரைச் சகலாகம பண்டித என்றது மிக மிகப் பொருத்தமே ஆகும்.

    திருநீறு கற்பம், அநுகற்பம், உபகற்பம், அகற்பம் என நான்கு வகைப்படும்.  அவற்றுள் முதல் மூன்றும் ஏற்றுக்கொள்வதற்கு உரியவை.  பின் ஒன்று ஏற்றுக் கொளற்குரியதன்று.  நோயற்ற பசுவின் சாணத்தைக் மந்திரத்தால் ஏற்றுச் சிவாக்கினியில் இட்டு எடுக்கப்பட்டது கற்பம்.  காட்டில் உலர்ந்த சாணத்தை கைக்கொண்டு பொடியாக்கிக் கோசலத்தை இட்டுப் பிசைந்து மந்திரம்கூறி ஓமத்தீயில் இட்டு எடுப்பது அநுகற்பம்.  காட்டுத்தீயால் வெந்த நீற்றையும் பசுத் தொழுவங்கள் தீப்பிடிக்க வெந்த நீற்றையும் எடுத்து மந்திரம் சொல்லி ஆன் நீர் பெய்து உண்டையாக்கி மடத்தின்கண் எரிகின்ற ஓமத்தீயில் சுட்டெரித்து எடுக்கப்பட்டது உபகற்பம்.  இவற்றையே,

    அம்பலத்தே உலகுய்ய ஆடும் அண்ணல்
        உவந்தாடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள்
    இம்பர்மிசை அநாமயமாய் இருந்த போதில்
        ஈன்றணிய கோமயமந் திரத்தி னால்ஏற்
    றும்பர்தொழ எழும்சிவமந் திரவோ மத்தால்
        உற்பலித்த சிவாங்கிதனில் உணர்வுக் கெட்டா
    எம்பெருமான் கழல்நினைந்தங் கிட்டதூநீ
        றிதுகற்பம் என்றெடுத்திங் கேத்தல் ஆகும்