வரன
வரன், ஆதிசேடனும்
பாம்பு, வைகுதலால்-வாழ்வதால், கரி-கருநிறமுடைய திருமால், தோய்-புணரும், திருமடந்தை, இலக்குமி,
காமுற்றிடலால்-விரும்புவதால். மால்-மேகம், திருமால், நேர்-ஒப்பாகும.
விளக்கம் : திருநீறு
சைவ சமயத்திற்கே சிறப்புடைய சின்னமே ஆயினும், பிற சமயத்தவர்க்கும் உரிய பொருளாகும். பிறசமயத்தவரும்
இதனை விருப்புடன் தரிக்கின்றனர். இதைக் கருத்தில்கொண்டே, “ சமயத்தில் உள்ளதும் நீறு, “ என்று
திருஞானசம்பந்தரும் திருவாய் மலர்ந்தனர். சமயத்தில் உள்ளது நீறு என்பதன் பொருள் எல்லாச்
சமயங்களிலும் உள்ளது நீறு என்பதேயாகும். இக்காலத்திலும் முஸ்லீம்கள் பாத்தியா பண்ணும்போது
முகத்தில் சாம்பலைப் பூசுவதைக் காணலாம். கிறிஸ்தவர்கள் வருடத்தில் ஒரு நாளைச் சாம்பல் திருநாள்
எனக்கொண்டு அந்நாளைக் கொண்டாடுகின்றனர். திருமாலின் திருமேனியில் திகழ்வதும் இத்திருநீறே.
“கரியமேனிமிசை வெளியநீறு சிறிதே இடும் கோலத் தடங்கண்பெருமான் “ என்றே நம்மாழ்வார்
குறிப்பிடுகிறார். இக்கருத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கியே ஈண்டு, “நண்பால் எவரும்
உறத்தரிக்கம் நலம்கூர் நீறு “ என்று கூறப்பட்டது. “உள்மாசு கழுவுவது நீறு “ ஆதலின்,
நலம்கூர் நீறு எனப்பட்டது. மேலும், “தென்னன் உற்றதீப்பிணி ஆயின தீர ‘ இது பயன் பட்டமையின்,
“நலம் கூர் நீறு “ எனப்பட்டது என்றலுமாம்.
குன்றத்தூரில் இருப்பவர்கள்
நீறுபுசும் நிலைமையினர். அவர்கள் தம்நாவால் அரஅரமகாதேவா என்று கூறும் இயல்பினர்
அரகர என்ன
அரியதொன் றில்லை
அரகர என்ன
அறிகிலர் மாந்தர்
அரகர என்ன
அமரரும் ஆவர்
அரகர என்ன
அறும்பிறப் பன்றே
என்பது திருமந்திரம்
ஆதலின், குன்றை நகரவாசிகள் அரசுர என்பதை கூறும் மந்திரமாகக் கொண்டனர். இவற்றையே
|