புலவர
புலவர் அமுது கொள என்பது புலவர்கள் சோறுண்ண என்பதோடு, தேவர் அமுது உண்ண எனவும் அரம்பை எழுதல் என்பது, வாழை
மரங்கள் வளர்தல் என்பதோடு தேவலோக மாதர்கள் குன்றத்தூருக்கு வர எழுதல் எனவும், நாகேசன்
வைகுதல் என்பது நாகேச்சுரம் தங்கி இருத்தல் என்ற பொருளுடன், பாம்புகட்கு அரசனான ஆதிசேடன்
இருத்தல் எனவும், திருமடந்தை காமுறுதல் என்பது செல்வம் இருக்க விரும்புதல் என்ற பொருளுடன் இலக்குமி
விரும்புதல்எனவும், கருமால் கிடந்து துயிலல் என்பது கரிய மேகங்கள் படிந்திருத்தல் என்ற
பொருளுடன் திருமால் அரிதுயில் அமர்தல் என்ற பொருளையும் தருதலின் இப்பாடல் இரட்டுற மொழிந்த
சிலேடை அணியாகும்.
(23)
3. முந்த எழுமாற்
றுயர்பொன்னால்
முழுச்செம் மணியால்
மாளிகையும்
முதுசூ ளிகையும் தெற்றிகளும்
முகப்பும்
பிறவும் அமைதலினால்
இந்த நகரம்
பொன்னகரத்
தினும்மிக்
கிமைத்தல் விதிஉளத்தில்
எண்ணி ஆடூஉம்
மகடூஉவாம்
எல்லா உயிரும்
விழிஇமைத்தல்
நந்த அருட்சம்
பந்தர்மணம்
நண்ணி யவர்க்கும்
கதிகொடுத்த
நலம்போல்
இதுசார் புவிஅகத்து
நகர்க்கெ
லாம்செய் தனன்என்று
சந்தத் தவர்சொல்
குன்றத்தூர்த்
தலைவா தாலோ
தாலேலோ
சகலா கமபண் டிததெய்வச்
சைவா தாலோ
தாலேலோ
[ அ. சொ. ] முந்த-முதன்மையாக,
சூ ளி கை-நிலா முற்றங்கள், தெற்றிகள்-திண்ணைகள், முகப்பு-முற்பகுதிகள்,
|