பக்கம் எண் :

இன

 

       தாலப் பருவம்

297

    இன்னோரன்ன காரணங்களால் “துங்கம் மிகுந்த அருந்தவம்” என்று தவம் சிறப்பிக்கப்பட்டது.  இத்தகைய தவக்கோலம் பூண்டவர் திரண தூமாக்கினி.  அவர் வாக்காகிய தொல்காப்பியமாம் தொன்மைநூல், எவராலும் அசைக்க ஒண்ணா அரும்பெருங் கருத்துக்களையும், இலக்கண நுட்பங்களையும் கொண்டுள்ளது.  இதனை அவர் அவர்கள் அந்நூலைக் கொண்டு படித்தால் நன்கு உணர்வர்.  இத்தகைய நூலை எவரும் எத்தகைய குற்றமும் காணாத நிலையில் திரணதூமாக்கினி பாடிய காரணத்தால், “தோலா நாத் திரணதூமாக்கினி” எனப்பட்டார்.  இதனை ஓர் எடுத்துக் காட்டால் மட்டும் எடுத்துக் காட்டி, மேலே செல்வோமாக.  நன்னூல் ஆசிரியர் பல்கலைக்குரிசில் பவணந்தியார், உயர்திணைக் குரியார் யாவர்? அஃறிணைக்குரியார் யாவர் என்பதைக் குறிப்பிடுகையில்,

        “மக்கள் தேவர் நரகர் உயர்திணை
         மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை”

என்றனர்.

    ஒல்காப்பெருமை வாய்ந்த தொல்காப்பியர், இவ்விரு திணைகளைக் குறிப்பிடும்போது,

    உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
    அஃறிணை என்பனார் அவரல பிறவே
    ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே

என்றனர். 

    இவ்விருபெரும் ஆசிரியர்கள் அவ்வத்திணைக்குரியவர்களை குறிப்பிடும் நிலைகள் செவ்வனே வேறுபடுத்திக் கூறப்பட்டுள்ளதை நன்கு ஈண்டு நோக்குதல் வேண்டும்.  நரகரையும் உயர்திணையின்பால் படுத்தினர் பவணந்தியார்.  தீவினைகட்குரியவர் அல்லரோ நரகர்?  அவர்கள் எக்காரணத்தால் உயர்திணையாதல் கூடும்? வள்ளுவர் தேவர்களைப் பற்றிக் கருதியுள்ள கருத்து, கயவர் என்பதாகும்.  இதனை,