பக்கம் எண் :

New Page 1

30

             காப்புப் பருவம்

கேற்றி வழிபட்டவர் நமிநந்தி அடிகள்.  மற்றொரு பாடல் பெற்ற தலமும் திருவாரூரில் உண்டு.  அது திருவாரூர் கீழ் வீதியில் அமைந்துள்ளது.  அதன் பெயர் திருவாரூர் பரவையுண் மண்டலி என்பது.  சுவாமியின் பெயர் மண்டலேசுவரர்.  தேவியார் பெயர், பஞ்சின்மெல் அடியாள்.  இத்தலத்தைச் சுந்தரர் பாடியுள்ளனர்.  இத்தலத்தைத் துலாநாயனார் கோயில் என்றும் கூறுவர்.  தூவாய் நாயனார் என்பது மருவித் துலா நாயனார் எனப்பட்டது.  இறைவர் தூவாயர் என்பதை,  “ தூவாயா !”  என்று சுந்தரர் தம் திருப்பதிகத்தில் குறிப்பிடுதல் காண்க.

    ஆளுடைய நம்பிகள் பரவையாரை மணந்து தியாகேசரை வணங்க வந்தவர், திருக்கோயில் புகும்போதே, ஆயிரக்கால் மண்டபமாம் தேவாசிரிய மண்டபத்தில் இருந்த அடியவர்கட்கு அடியார் ஆகும்நாள் எந்நாள் என்ற எண்ணத்துடன் நுழைந்தார்.  இதனைச் சேக்கிழார்,

        கண்ணுதல் கோயில் தேவா
            சிரியனாம் காவ ணத்துள்
        விண்ணவர் ஒழிய மண்மேல்
            மிக்கசீர் அடியார் கூடி
        எண்ணிலார் இருந்த போதில்
            “ இவர்க்கியான் அடியார் ஆகப்
        பண்ணுநாள் எந்நாள்“  என்று
            பரமர்தாள் பரவச் சென்றார்.

என்று கூறியுள்ளனர்.

    திருவாரூர்த் தியாகேசப் பெருமானார் நம்பி ஆரூரது அடியார் பக்தியை  வியந்து, அவர்க்கு அடியார்களின் பெருமையினை உணர்த்தியதோடின்றி, “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்“ என்ற அடியினையும் அசரீரியாக எடுத்து மொழிந்து  “பாடல்பாடு“  என்றும் அருள் செய்தார்.  உடனே பாவையார் கேள்வனார், திருவருள் துணை கொண்டு,