New Page 1
மையால் மிக்கிருக்கும் தாளாளர் “ என்று தமது தெய்வத்திருமறையாம் திருமுறையில் பாடிச் சிறப்பித்த மேன்மை மிக்கவர்.
இஃது ஒன்றே இவர்களின் சிறப்புக்குப் போதுமான சான்றாகும். சேக்கிழார் இவர்களின் புகழைப்
பாடும்போது. “ மேதக்க நிலை வேளாண் குலம் “ என்றும் “தாளாண்மை உழவு தொழில் தன்மைவளம்
தலைசிறந்த வேளாளர் “ என்றும், “தகவுடைய வேளாளர் குலம் “ என்றும், “ விளங்கும் வண்மை
மிக்குள்ள வேளாண் தலைமைக் குடி “ என்றும் பாடிக் காட்டியுள்ளார். உமாபதி சிவம்,
இமயமலை அரையன்மகள்
தழுவக் கச்சி,
ஏகம்பர் திருமேனி
குழைந்த ஞான்று
சமயம்அவை ஆறினுக்கும்
தலைவிக் கீசர்
தந்தபடி எட்டுழக்கீர்
ஆழி நெல்லும்
உமைதிருச்சூ டகக்கையால்
கொடுக்க வாங்கி
உழவுதொழி
லால்பெருக்கி உலகம் எல்லாம்
தமதுகொழு மிகுதிகொடு
வளர்க்கும் வேளாண்
தலைவர்பெரும்
புகழ்உலகில் தழைத்த தன்றே
என்றும்,
மாறுபடு பழையனூர்
நீலி செய்த
வஞ்சனையால்
வணிகன்உயிர் இழப்பத் தங்கள்
கூறியசொல் பிழையாது
துணிந்த செந்தீக்
குழியில்எழு
பதுபேரும் முழுகிக் கங்கை
ஆறணிசெஞ் சடைத்திருவா
லங்காட் டப்பர்
அண்டமுற நிமிர்ந்தாடும்
அடியின் கீழ்மெய்ப்
பேறுபெறும்
வேளாளர் பெருமை எம்மால்
பிறித்தளவிட்
டிவளவெனப் பேச லாமோ
என்றும்,
காராளர் அணிவயலில்
உழுது தங்கள்
கையார நட்டமுடி
திருந்தில் இந்தப்
பாராளும் திறல்அரசர்
கவித்த வெற்றிப்
பசும்பொன்மணி
முடிதிருந்தும் கலப்பை பூண்ட
|