பக்கம் எண் :

உடம

302

             தாலப் பருவம்

    உடம்பு எத்தகையது என்பதை மணிமேகலை,

    வினையின் வந்தது வினைக்கு விளைவாயது
    புனைவன நீங்கில் புலால்புறத் திடுவது
    மூப்புவிளி வுடையது தீப்பிணி இருக்கை
    பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
    புற்றடங் கரவின் செற்றக் கொள்கை
    அவலக் கவலை கையா றழுங்கல்
    தவலா உள்ளம் தன்பால் உடையது
    மக்கள் யாக்கை இது

என்று தெளிவுறக் கூறுகிறது.

    இதனை உட்கொண்டே ஆசிரியர் “அங்கம் எடுத்துழல் துன்பம், “ என்றனர்.

    பெரியபுராண நூலைப் படிப்பதன் பயன் பெரிது.  இதனை சேக்கிழார் பெருமானாரே தெள்ளத் தெளிய எடுத்து மொழிந்துள்ளார்.  தமது நூலைச் சூரியனுக்கு ஒப்பிட்டுக் காட்டுகிறார் புலவர் பெருமானார்.  சூரியன் உலகில் உள்ள புற இருளை நீக்குகிறது.  அதுபோல இப் பெரிய புராணமாம் திருத்தொண்டர் புராணம், மக்கள் உள்ளத்தில் நிறைந்த அஞ்ஞான இருளைப் போக்கவல்லது என்கிறார்.  அஞ்ஞானம் ஒழிந்தால் மெய்ஞ்ஞானம்தானே நிலவும், மெய்ஞ்ஞானமாகிய பலனைத் தவிர்த்துப் பெறவேண்டியது யாதுளது? ஒரு நூலால் அடைய வேண்டிய பொருள்களாகிய அறம் பொருள் இன்பம் வீடு என்றும் நூற்பொருள்களையும் மெய்ஞ்ஞானத்தால் பெறலாம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? ஆகவே, தொண்டர் புராணம் அக இருளை நீக்கி, ஞான ஒளியை நல்கும் என்று கூறுவதால் பயனைக் கூறியதாகும் இதனைச் சேக்கிழார்,

        இங்கிதன் நாமம் கூறின்
            இவ்வுல கத்து முன்னாள்
        தங்கிருள் இரண்டின் மாக்கள்
            சிந்தையுள் சார்ந்து நின்ற