பக்கம் எண் :

இப

 

       தாலப் பருவம்

305

இப்பிறவி போய்நீங்க எரியினிடை நீமூழ்கி
முப்புரிநூல் மார்பருடன் முன்அணைவாய் எனமொழிந்
தப்பரிசே தில்லைவாழ் அந்தணர்க்கும் எரிஅமைக்க
மெய்ப்பொருளா னார்அருளி அம்பலத்தே மேவினார்

என்பது அக்கட்டளை மொழி.

    இறைவர் சுந்தரருக்கும் அடியார் பெருமையினையும், அருமையினையும் அருளிச் செய்ததை,

        “பெருமையால் தம்மை ஒப்பார்
             பேணலால் எம்மைப் பெற்றார்
         ஒருமையால் உலகை வெல்வார்
             ஊனமேல் ஒன்றும் இல்லார்
         அருமையாம் நிலையில்  நின்றார்
             அன்பினால் இன்பம் ஆர்வார்
         இருமையும் கடந்து நின்றார்
             இவரைநீ அடைவாய் என்று”

அருளியதாலும்,

    சுந்தரரைப்பற்றிச் சங்கிலியாரிடம் கூறும்போது,

        சாரும் தவத்துச் சங்கிலிகேள்
            சால என்பால் அன்புடையான்
        மேரு வரையின் மேம்பட்ட
            தவத்தான் வெண்ணெய் நல்லூரில்
        யாரும் அறிய யான்ஆள
            உரியான் உன்னை எனைஇரந்தான்
        வார்கொள் முலையாய் நீஅவனை
            மணத்தால் அணைவாய் மகிழ்ந்தென்றார்

என்று எடுத்து மொழிந்திருப்பதாலும், இறைவர் அடியார் அருமையும் பெருமையும் நாளும் அறி அம்பலவாணர் எனப்பட்டார்.

    இறைவன் உள்ளிருந்து நமக்கு உணர்த்திலர் எனில், நம்மால் யாதும் செய்ய இயலாது. இதனை வற்புறுத்தவே அப்பர் பெருமானார்,