ஆட
ஆட்டுவித்தால் ஆரொருவர்
ஆடா தாரே
அடக்குவித்தால் ஆர்ஒருவர்
அடங்கா தாரே
ஒட்டுவித்தால் ஆரொருவர்
ஓடா தாரே
உருகுவித்தால்
ஆர்ஒருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆர்ஒருவர்
பாடா தாரே
பணிவித்தால்
ஆர்ஒருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆர்ஒருவர்
காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய்க்
காட்டாக் காலே
என்று பாடியருளினர்.
இந்த உண்மையினை
உணரும்போது சேக்கிழார் பெருமானார், இறைவன் தம் உள்ளத்தில் அமர்ந்து உணர்த்த தொண்டர்களின்
வரலாற்றைப் பாடி முடித்தனர் என்பது தெரிகிறது.
இறைவன் முதல் எடுத்துக்
கொடுத்த பின்பேதான் நூலைப் பாடினர் என்பதைச் சேக்கிழாரே,
அருளின் நீர்மைத்
திருத்தொண் டறிவரும்
தெருளி னீர்இது செப்புதற்
காமெனில்
வெருளின் மெய்ம்மொழி
வான்நிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப்புகல் வாம்அன்றே
எனக் குறிப்பிட்டுள்ளார்.
இறைவரும் அனபாயனுக்கு
இட்ட கட்டளையின் போது,
சேக்கி ழான்நமது
தொண்டர்சீர் பரவ
நாம்மகிழ்ந்
துலகம் என்றுநம்
வாக்கி னால்அடி எடுத்து ரைத்திட
வரைந்து நூல்செய்து
முடித்தனன்
காக்கும் வேல்வளவ
நீயிதைக் கடிது
கேள்
என்று அருளிச் செய்தனர்.
முதல் என்றது
“உலகெலாம்” என்னும் தொடராகும். உலகு என்பது மங்கல மொழி. அதனால்தான், “காமரும் முதல்”
என்றனர்.
|