பக்கம் எண் :

கன

 

       தாலப் பருவம்

313

கனிந்த கவிகளைப் பாடியுள்ளார்.  நெற் கதிர்கள் நன்கு முதிர்ந்து தலை சாய்ந்து இருந்த நிலைமையினைக் கூறும்போது, அன்பர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தால் எப்படித் தலை குனிந்து தழுவி அன்புடைமையி்னை வெளிக் காட்டுவரோ அதுபோல நெற்கதிர்கள் முதிர்ந்து தலை சாய்ந்து காணப்பட்டன என்பதை,

        பத்தியின் பால ராகிப்         
            பரமனுக் காளாம் அன்பர்
        தத்தமில் கூடி னார்கள்
            தலையினால் வணங்கு மாபோல்
        மொய்த்தநீள் பத்தி யின்பால்
            முதிர்த்தலை வணங்கி மற்றை
        வித்தகர் தன்மை போல
            விளைந்தன சாலி எல்லாம்

என்ற சேக்கிழார் வாக்குப் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டக் கவி பாடிய காவலர் என்பதற்கு ஏற்ற சான்று அன்றோ? இத்துடன்,

    சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு
    வாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்த
                                        வாகிச்
    சூல்முதிர் பசலை கொண்டு சுருள்விரித் தரனுக் கன்பர்
    ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்கள் எல்லாம்

என்பதையும் எடுத்துக் காட்டலாம்.

    இது மட்டுமா? அப்பர் பெருமானார், கூத்தப் பெருமானார் முன் நின்ற நிலையினைக் கூறும்போது,

    கையும் தலைமிசை புனைஅஞ் சலியன
        கண்ணும் பொழிமழை ஒழியாதே
    பெய்யும் தகையன கரணங் களும்உடன்
        உருகும் பரிவின பேறெய்தும்  
    மெய்யும் தரைமிசை விழுமுன் பெழுதரும்     
        மின்தாழ் சடையொடு நின்றாடும்  
    ஐயன் திருநடம் எதிர்க்கும் பிடும்அவர்     
        ஆர்வம் பெருகுதல் அளவின்றால்