பக்கம் எண் :

என

314

             தாலப் பருவம்

என்றும், திருவாரூர் திருவீதியில் அப்பர் சென்ற நிலையினை,

    மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாரும்
        திருவடிவம் மதுர வாக்கில்
    சேர்வாகும் திருவாயில் தீந்தமிழின்
        மாலைகளும் செம்பொன் தாளே
    சார்வான திருமணமும் உழவாரத்
        தனிப்படையும் தாமும் ஆகிப்
    பார்வாழத் திருவீதிப் பணிசெய்து
        பணிந்தேத்திப் பரவிச் செல்வார்

என்றும் பாடியிருக்கும் பாடல்களைக் காண்கையில், பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடி இருத்தலை உணரலாம். இவ்வாறான கவிகள் பல.

    கவிகளை அமைப்பதிலும் வல்லவர் குன்றை ஆசிரியர் அவை அடக்கம் பாடுகின்ற நிலையில் இவர்,

    தெரிவ ரும்பெரு மைத்திருத் தொண்டர்தம்
    பொருவ ரும்சீர் புகலலுற் றேன்முற்றப்
    பெருகு தெண்கடல் ஊற்றுண் பெருநசை
    ஒருசு ணங்கனை ஒக்கும் தகைமையேன்

என்று பாடுகிறார்.

    இப்பாடலில் அமைந்துள்ள உவமை நயனை உணர்தல் வேண்டும்.

    கடல,் நீரையுடையதாயினும் அதனைப் பருக இயலாது, ஆகவே, அதன் சிற்றூறலே பருகுதற்குரியது என்பதற்காக “ஊற்றுண்” என்றும், நீர் மிகுதியாகக் கிடைப்பினும் அப்படியே பருகுதல் இயலாது.  சிறிது சிறிதாகவே பருக இயலும் என்பதையும் உணர்த்த,     சுணங்கனை உவமை கூறியும், ஆற்றில் வெள்ளம் ஓடினும் நாய் நக்கித்தானே குடிக்கவேண்டும் என்னும் பழமொழிக்கு இணங்கப் பாடிய வன்மையைக் காண்க.  (நாய் நன்கியேதான் நீரைப் பருகும்)

    சுந்தரர் தமக்குப் பரவையாரை மணம் புரிவித்தது போலச் சங்கிலியாரையும் மணம் செய்து வைக்கும்படி