இ
இறைவனிடம் முறையிட்ட
நிலையினை அருண்மொழித் தேவர் பாடும்போது,
மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும்
அன்றி மணிநீள்
முடியின்கண்
கங்கை தன்னைக்
கரந்தருளும்
காதல் உடையீர்
அடியேனுக்
கிங்கு நுமக்குத் திருமாலை
தொடுத்தென் உள்ளத்
தொடைஅவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத்
தந்தென் வருத்தம்
தீரும்என
என்ற பாடியுள்ளனர்.
இதில், ஒரு மனைவி இருக்க மற்றொரு மனைவியை மணத்தல் முறையன்று என்பதை உணர்ந்தும், சங்கிலியை
மணக்க விரும்பிக் கேட்டதற்குக் காரணம், இறைவரும் உமையை மணந்திருந்தும், கங்கையைப் புணர்ந்தார்
அல்லரோ? ஆகவே, அதனைக் குறிப்பிட்டே கவியை அமைத்துப் பாடியுள்ளமை நோக்குங்கால்,
நயமான முறையில் கவிபாடுதலில் வல்லவர் என்பது புலப்படுதல் காண்க. இது குறித்தே, “கவிவலவ”
என்றனர்.
சேக்கிழார் அனபாயனுக்குச் சீவக சிந்தாமணி பயன் அற்றது என்று எடுத்துக்காட்டிய இடம் முன்னரே
கூறப்பட்டது. அதனை ஆண்டுக் காண்க. அவ்வாறே அடியார் வரலாற்றில் ஈடுபடக் கூறியதும்
முன்னர் விளக்கப்பட்டது. சோழர்கட்குப் புலிக்கொடி உரித்தாதலைச் சங்க நூற்களில் பல
இடங்களில் காணலாம். அக்கொடி பகைவர் குன்றுகளில் பறக்கவிடப்பட்டன என்பதும் அந்நூற்களைக்
கொண்டு உணரலாம். “கொடுவரிக் கோண்மா குயின்ற சேண்” என்பது புறநாநூறு, “மின்தவழும்
இமய நெற்றியில் விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள்” என்றும்,
இப்பால் இமயத்து
இருத்தியவாள் வேங்கை
உப்பாலைப்
பொற்கோட் டுழையதா எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒருதனி ஆழி
உருட்டுவோன் எனவே
|