பக்கம் எண் :

New Page 1

 

       தாலப் பருவம்

317

சேக்கிழார் கூறுவதினின்றும் முத்தி வழிகாட்டுதற்குச் சமணர் ஏதுவாகாது என்பது பெறப்படுகின்றதன்றோ? திருஞானசம்பந்தர் தம் பதிகம் தோறும் சமண பௌத்தர்களைப் பாடியதன் கருத்து, அவர்கள் நெறி பயன் அற்றது என்பதாகும் என்பதைச் சேக்கிழார் உணர்ந்து “அருகந்தர் திறம் முத்தித் திறம் அல” என்றனர்.

வேதகா ரணராய வெண்பிறைசேர் செய்யசடை
நாதன்நெறி அறிந்துய்யார் தம்மிலே நலம்கொள்ளும்
போதம்இலாச் சமண்கையர் புத்தர்வழி பழிஆக்கும்
ஏதமே எனமொழிந்தார் எங்கள்பிரான் சம்பந்தர்

என்றும் பாடியுள்ளார்.                                        

(29)

    சைவ சமயமே முத்தி தரும் சமயம் என்ற குறிப்புப் பெரிய புராணத்துள் பல்வேறு இடங்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.  “வேதப்பயனாம் சைவமும் போல்” என்றும்,

    வேத உள்ளுறை யாவன விரிபுனல் வேணி
    நாதர் தம்மையும் அவரடி யாரையும் நயந்து
    பாத அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே
    காத லால்அவை இரண்டுமே செய்கருத் துடையார்

என்றும் சைவ சமயத்தவர் கடமையையும், சைவத்தின் மேன்மையையும் குறிப்பிடுகின்றமையின், “சிவமடைய முயல் செயல்வலவ” என்றனர்.

    சிவம் அடைய என்பதற்கு முத்தி அடைய என்ற பொருளும் இருத்தலின், சேக்கிழார் பாடல்கள் முத்தி அடைதற்குரிய நிலைகளையும் அடைந்த நிலைகளையும் பலவாறு எடுத்து மொழிந்துள்ளமையின், ‘சிவம் அடைய முயல் செயல் வலவ” எனப்பட்டார் எனினும் ஆம்.  அங்ஙனம் செயவல்லார் என்பது, அவர் அடியார்கள் பெற்ற முத்தி நிலைகளை,

    விறலுடைத் தொண்ட னாரும்
        வெண்ணகைச் செவ்வாய் மென்தோள்
    அறவியல் கூந்த லாளாம்
        மனைவியும் அருளின் ஆர்ந்த