பக்கம் எண் :

318

             தாலப் பருவம்

    திறலுடைச் செய்கை செய்து
        சிவலோகம் அதனை எய்திப்
    பெறவரும் இளமை பெற்றுப்
        பேரின்பம் உற்றார் அன்றே

என்றும்,

“திருப்பணி பலவும் செய்து சிவபதம் நிழலில் சேர்ந்தார்”

என்றும்,

நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி
அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்டஅர சமர்ந்திருந்தார்

என்றும், பாடி இருத்தலால் அறிக.                           

(29)

9.     ஈற்றுத் தலையொரு மவுலி புனைந்தால்
           என்னச் சொல்அணிஒன்
       றெய்திப் பொலியப் பொருள் அணி ஆயின
           எவ்விட னும்வீற்று
       வீற்றுக் கிடைஇறை பட்டன அமைய
           விளம்பு வனப்பினொடு
       மேய முதற்பொருள் ஆகிய மூன்றும்
           வேண்டும்இ டத்தெய்த
       ஆற்றுப் புனல்நா மப்பொருள் கோள்முதல்
           அறைமற் றுள்ளனவும்
       அமையத் தொண்டர் புராணம் நவின்றவ
           அடருபு சூழ்ந்தபசும்
       தாற்றுக் கதலிக் குன்றைத் திருமுனி
           தாலோ தாலேலோ
       சைவப் பயிர்தழை யத்தழை யும்புயல்
           தாலோ தாலேலோ

    [ அ. சொ. ]  ஈற்றுத்தலை-செய்யுளின் இறுதி, மவுலி-முடி, எய்தி-அடைந்து, பொலிய-விளங்க, வீற்று லீற்றுக்கிடை-தனித்தனியாகக் கிடந்து, இறைபட்டன-சிந்திப்பரந்தன வனப்பு-அழகு, மேய-பொருந்த