இ
இது தற்குறிப்பு
ஏற்ற அணியின் பால்படும். இவ்வாறு பல அணிகள் பெரிய புராணத்தில் தனித்தனியே சிந்திப்
பரவி இருக்கின்றன. ஆதலின், “வீற்று வீற்றுக் இறை பட்டன” என்றனர்.
இங்ஙனம்
சொல்லணியும், பொருளணியும் கூறும்போதும், இறைவனைப்பற்றிய குறிப்பினையும் உடன் கூறிச் செல்லும்
பண்பு இவர்பால் உண்டு. இது குறித்தே இறைபட்டன என்னும் தொடரை ஆசிரியர் அமைத்தனர் என்று
கூறினும் அமையும். சேக்கிழார் ஆனாய நாயனார் கொன்றை மரத்தருகே சென்று குழலினை வாசிக்கச்
சென்ற நிலையினைக் குறிப்பிடுகையில்,
சென்றணைந்த ஆனாயர்
செய்தவிரைத் தாமம்என
மன்றல்மலர்த் துணர்தூக்கி
மருங்குதாழ் சடையார்போல்
நின்றநறும் கொன்றையினை
நேர்நோக்கி நின்றுருகி
ஒன்றியசிந் தையில் அன்பை
உடையவர்பால் மடைதிறந்தார்
என்று
குறிப்பிட்டுள்ளனர். இஃது இறைபட்டன என்பதற்கு ஏற்ற சான்று அன்றோ?
வனப்பாவது
அழகாகும். அவ்வழகு பத்து என்று புலவர் கூறுவர். அவையே,
சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க்
கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை
உடைமை ஆழமுடைத் தாதல்
முறையின்
வைப்பே உலகம்மலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த
தாகுதல்
நூலிற்கு அழகெனும் பத்தே
என்பன.
இந்தப்
பத்து அழகும் நம் பெரிய புராணத்தில் உண்டு திருநாவுக்கரசு நாயனார் அப்பூதியார் அமைத்த தண்ணீர்ப்
|