பந
பந்தலில் தம் பெயர்
பொறித்திருப்பதைக் கண்டதும் வியப்புற்று, தம் பெயரை எழுதியவர் யாவர்? அவரை யாம் காண வேண்டும்
அன்றோ? என்ற கருத்தில் அப் பந்தரிடை இருந்தவரை நோக்கி, “இப்பந்தர் இப் பெயரிட்டு இங்கமைத்தார்
யார்?” என்று கேட்டனர். இவ்வாறு கேட்ட அப்பர் பெருமானார்க்கு ஆண்டிருந்தோர் சுருங்கச்
சொல்லி விளங்க வைக்கும் முறையில்.
துன்றியநூல்
மார்பரும்இத்
தொல்பதியார்
மனையின்கண்
சென்றனர்இப்
பொழுதுஅதுவும்
சேய்த்தன்று
நணித்தென்றார்
என்றனர்.
இவ்விரண்டடிகளில்
பந்தல் அமைத்தவர் அந்தணர் என்பதையும், அவ்வந்தணர் இவ்வூர்வாசி என்பதையும், அவர் வீடு
வாசலுடன் இல்லறத்தை நடத்துபவர் என்பதையும், அவர் இப்பொழுதுதான் தம் இல்லம் சென்றதால்,
உடனே சென்றால் அவரைக் காணலாம் என்பதையும், அவர் வீடும் தூரத்தில் இல்லை அருகில்தான் உள்ளது
என்பதையும் எத்துணை அழகுற சுருக்கமும் விளக்கமும் அமைய அறிவித்து நிற்கின்றனர். பாருங்கள் !
மாதொரு பாகனார்க்கு
வழிவழி அடிமை செய்யும்
வேதியர் குலத்தில் தோன்றி
மேம்படு சடைய னாருக்கு
ஏதமில் கற்பின்
வாழ்க்கை மனைஇசை ஞானியார்பால்
தீதகன் றுலகம் உய்யத்
திருஅவ தாரம் செய்தார்
என்னும் இப்பாட்டில்
சுந்தரர் அந்தணர் மரபினர் என்பதையும், அவரது பெற்றோர் இன்னார் என்பதையும் எவ்வளவு அழகுற
விளங்க வைத்துள்ளார் என்பதைக் காண்க.
கொத்தார்மலர்க்
குழலாள்ஒரு
கூறாய்அடி
யவர்பால்
மெய்த்தாயினும்
இனியானைஅவ்
வியன்நாவலர்
பெருமான்
|