New Page 1
டும்போது தருக, என்று வைத்துச்
செல்ல, சின்னாட் கழித்து வந்து கேட்டபோது, அஃது இல்லாமல் போக, இறைவர் இருவரையும் கைகோத்துக்
கொண்டு குளத்தில் மூழ்கி, “நாங்கள் அவ் வோட்டைக் களவாடவில்லை“ என்று சத்தியம் செய்யுமாறு
கூற, இருவரும் ஒரு கழியின் இருமுனையினைப் பிடித்து, குளத்தில் மூழ்கி எழுந்தபோது, கழி மறைந்து
இருவர் கைகளும் ஒன்று சேர்ந்து பிடித்திருக்கும் கோலத்தில் மூப்பு நீங்கி, இளம் பருவத்தோடு
காட்சி அளித்தனர். இறைவர். “ இக்கோலத்தோடே நம்பால் இருக்க“ என்று கூறி மறைந்தனர்.
இயற்பகையார்
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் மரபில் தோன்றி, எவர் எது கேட்பினும் ஈந்துவந்தனர்.
இறைவர் இவர்போல் வந்து, இவர்தம் மனைவியாரைக் கேட்டனர். இவர் சிறிதும் தடை கூறாது ஈந்தனர்.
இறைவர் அவ்வம்மையாரை அழைத்துச் சென்று திருச்சாய்க்காட்டில் விட்டு மறைந்தனர். நாயனார்,
திருவருளை வியந்து போற்ற இறைவர் அவர்க்குத் திருவருள் புரிந்தார்.
இளையான்குடிமாறர்
இளையான்குடி என்னும் ஊரில் வேளாளர் மரபில் பிறந்தவர். மாறர் என்னும் பெயரினர். இவர்
அடியார்கட்கு அமுது படைத்து வந்தவர். இவர் வறுமை உற்ற நிலையிலும் வந்தவர்க்கு எந்தவேளையும்
இல்லை என்னாது உணவு அருந்தியவர். ஒருநாள் நல்ல மழையில் இறைவர் கிழவராய் இவர் வீட்டிற்குவர,
அப்போது வீட்டில் ஒன்று இல்லாத விலையில், நிலத்தில் விதைத்த விதைகளைக் கொணர்ந்து பக்குவப்படுத்தி
உணவு ஊட்டியவர்.
மெய்ப்பொருள்
நாயனார் திருக்கோவலூர் மன்னர். இவரை முத்தநாதன் என்பவன் வெல்ல முயன்றும், முடியாமையின்,
சிவனடியார்வேடம் பூண்டு, நாயனார் இடம்சென்று ஆகமம் உபதேசம் செய்வதாகக் கூறி, அவர் வணங்கும்
போது கத்தியால் குத்தினன். அந்நிலையிலும் முத்தநாத
|