னுக
னுக்குத் தன் பரிசனங்களால்
தீங்கு வராவண்ணம் வெளியே விட்டு வருமாறு கட்டளையிட்டு இறைவன் திருவடி உற்றனர்.
விறல்மிண்டர்
செங்குன்றூர் வேளாளர். முன்னர்த் திருத்தொண்டர்களை வணங்கி, பின் சிவனாரை வணங்கும் கடப்பாடுடையவர்.
சுந்தரர் திருவாரூர் சென்றபோது, தேவா சிரிய மண்டபத்தில் இவர் அடியார் நடுவுள் இருந்த நிலையில்
அவர் வணங்காது போவதைக்கண்டு, சுந்தரரும் தமக்குப் புறம்பு, சிவபெருமானும் புறம்பு என்று கூற,
சுந்தரர் அடியார்க்கு அடியேன் என்று அமைந்த திருத்தொண்டத் தொகையினைப் பாட மகிழ்ந்தவர்.
அமர் நீதியார்
பழையாறைப்பதியில் துணி வாணிபம் செய்துகொண்டு. அடியார்கட்குக் கோவணம் கொடுக்கம் தொண்டில்
ஈடுபட்டவர். ஒருமுறை சிவபெருமான் இவரிடம் வந்து, தம்மிடம் இருந்த கோவணத்தைக் கொடுத்து
நீராடி வந்து, பின் பெற்றுக்கொள்வோம் என்று கூறிச்சென்று மீண்டுவந்து கேட்டபோது, அக்கோவணம்
காணாதுபோகவே, சிவபெருமான் தம்மிடம் இருந்த மற்றொரு கோவணத்தைத் தராசில் வைத்து அதற்கு
ஈடாகக் கோவண ஆடை கொடுக்குமாறு கேட்கத் தம்மிடம் இருந்த எல்லாத் துணி, மணி, ஆபரணங்களையும்
வைத்தும் நிறை காணா நிலையில் தாம் தம் மனைவியாருடனும், தம் குழந்தையுடனும் ஐந்தெழுத்து ஓதி
ஏறத் தட்டு நிறை கண்டது. இறைவர் காட்சி தந்து அருள்புரிந்தார்.
இவ்வெழுவர்தம்
தொண்டும் குற்றம் அற்ற தொண்டு ஆதலின் “ வழு அரும்“ எனப்பட்டது. இதனை இவர்களைப் பற்றிச்
சொன்ன வரலாற்றுக் குறிப்புக்களை ஆழ்ந்து சிந்தித்தால் நன்கு தெரிந்துகொள்ளலாம். ஆண்டவனிலும்
அடியார் சிறந்தவர்கள் ஆதலின், எப்போதும் ஏத்தெடுத்தல் இன்றிஅமையாததாயிற்று.
|