ந
நாவை மறந்தனள்
பொதிய மலைத்தலை
நண்ணிய புண்ணிய
முனிவனெனும்
கோவை மறந்தனள்
சேவையர் காவல
னார்திரு நாவில்
குடிகொண்டாள்
என்று எடுத்து மொழிந்துள்ளனர்.
இதனை உட்கொண்டு ஈண்டு, “கலைக் கன்னி நின்று ஏவல் கேட்க“ எனப்பட்டது. சேக்கிழார் கலைஞர்களால்
வணங்கப்படுதலும், கலைமகள் அவர் நாவிலிருந்து அவர் இட்ட பணியைச் செய்தலும், இறைவர் அவர்க்கு
முதல் எடுத்துக் கொடுத்தலும் ஆகிய இவையே அளவாமகுத்துவம் ஆகும். இவ்வளவு பெருமைக்கு உரியவராயினும்,
தம் பணிவு தோன்றத் தம்மை ஒரு நாய்க்கு ஒப்பாக அவை அடக்கச் செய்யுளில் பாடியுள்ளனர். அப்பாடல்,
தெரிவ ரும்பெரு மைத்திருத்
தொண்டர்தம்
பொருவ ரும்சீர்
புகலல்உற் றேன்முற்றப்
பெருகு தெண்கடல்
ஊற்றுண் பெருநசை
ஒருசு ணங்கனை ஒக்கும்
தகைமையேன்
என்பது. இவ்வாறு இவற்
கூறியதை உற்று நோக்குங்கால், இவர், திருவள்ளுவர் கூறிய,
பெருக்கத்து வேண்டும்
பணிதல் ; சிறிய
சுருக்கத்து வேண்டும்
உயர்வு
என்னும் திருக்குறட்கு
எடுத்துக்காட்டாக விளங்குகின்றார் என்பது பெறப்படுதல் காண்க. இவற்றை நன்கு விளக்கவே “ அளவா
மகத்துவம் அடைந்திருந்தும், அலைமலி சுணங்கன் ஒப்பேன் என்று உரைத்தருளி, யாம் பெருக்கத்து வேண்டும்
ஆன்ற பணிவு எனும் மொழிப் பொருள் தேற்று குன்றை நகர் ஆளி “ எனக் கூறப்பட்டது.
“பொருள் தேற்று “ என்பதன் கருத்து, முன்னோர் மொழிகள், வெறும் வாய் மொழிகள் இல்லை.
அம்மொழிகட்கு இலக்கியமாக இருப்பவர்கள் உண்டு என்பது,
|