பக்கம் எண் :

 

சப்பாணிப் பருவம்

375

நிதியர் ஆகுவர் சீர்மை உடையர்ஆ குவர்வாய்மை
    நெறியர்ஆ குவர்பாவம் வெறியர்ஆ குவர்சால
மதியர்ஆ குவர்ஈசன் அடியர்ஆ குவர்வான
    உடையர்ஆ குவர்பாரில் மனிதர்ஆ னவர்தாமே

என்று நம்பிஆண்டார் கூறியது கொண்டு தெளிக.

    அப்பர் அடியைச் சூடுவதுபோலச்  சேக்கிழார் திரு அடியைச் சூடினும் இந்நிலை பெறுவர்.  ஆதலின், “தரும சினகரன்” என்றனர்.

    ஒரு குறியில் ஆவாகனம் பண்ணுதலாவது இன்னது என்பதை அப்பர்,

    உயிரா வணம் இருந்து உற்று நோக்கி
        உள்ளக் கிழியின் உருவெழுதி
    உயிரா வணம்செய்திட் டுன்கைத் தந்தால்
        உணரப்படுவா ரோடுஒட்டி வாழ்தி
    அயிரா வணம்ஏ றாதுஆன் ஏறுஏறி
        அமரர் நாடாளா தேஆரூர் ஆண்ட
    அயிரா வணமே என்னம் மானேநின்
        அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே

என்று குறிப்பிட்டுள்ளதை ஓர்க, இது யோகமுறை ஆவாகனம்.  கிரியா முறையில் ஆவகனம் செய்தலும் உண்டு.

    நாராயணீய உபநிடதம் நாராயணனே இறைவனது தேவி என்று கூறிப் பராசக்தியின் பெருமையை உணர்த்துவது.  இது சிறந்த உபநிடதங்களிலும் ஒன்று.  இதில் வணக்கம் இன்னது என்பதை நாகைப்புராணம்,

    அதிசயம் பயக்கும் நாராயண உபநிடதம் யாரை
    மதியினில் குறித்தியாவர் வணங்கினும் இவ்வணக்கம்
    துதிகெழு நினவே என்று சொலும்உனைக் குறித்து
                                            நாயேன்
    விதியில் செய்வணக்கம் வேறு மேவுமோ விமல வாழ்வே

என்கிறது. அதாவது யாரேனும் எத் தெய்வத்தையேனும் வணங்கினாலும், அவ்வணக்கம் அம்மை அப்பனையே சாரும் என்பதாம். இந்த உண்மையினையே நாராயணீயம் கூறுகிறது.  நமது சிவஞான சித்தியாரும்.