புலவர
புலவர் பெருமக்கள் இயற்கையில் நிகழும் நிகழ்ச்சியினைத் தாம் எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்பத் தம் குறிப்பை
அதனோடு தொடர்பு படுத்திப் பாடுவது இயல்பு. இது குறித்தே இத்தகைய பாடல்கள் தற்குறிப்பு ஏற்ற
அணியின்பால் படும் என்பர். திருஞான சம்பந்தர் குழவிப் பருவத்தில் செங்கீரை ஆடினார்.
அதனைச் சேக்கிழார் குறிப்பிடுகையில்,
வருமுறைமைப் பருவத்தில்
வளர்புகலிப் பிள்ளையார்
அருமறைகள் தலைஎடுப்ப
ஆண்டதிருமுடி எடுத்துப்
பெருமழுவர் தொண்டல்லால்
பிறிதிசையோம் என்பார்
போல்
திருமுகமண் டலம்அசையச்
செங்கீரை ஆடினார்
என்றும், சப்பாணி கொட்டியருளியதை
அறிவிக்கும்போது,
நாம்அறியோம் பரசமயம்
உலகீர் எதிர்நடவாது
போம்அகல என்றங்கை
தட்டுவதும் புனிதன்பால்
காமருதா ளம்பெறுதற்
கொத்துவதும் காட்டுவதுபோல்
தாமரைச்செங் கைகளினால்
சப்பாணி கொட்டினார்
என்றும், தவழ்தலைச் செய்ததைக்
குறிப்பிடும்போது,
விதிதவறு படும்வேற்றுச்
சமயங்கள் இடைவிழுந்து
கதிதவழ இருவிசும்பு நிறைந்தகடி
வார்கங்கை
நதிதவழும் சடைமுடியார்
ஞானம்அளித் திடஉரியார்
மதிதவழ்மா ளிகைமுன்றில்
மருங்குதவழ்ந் தருளினார்
என்றும் தற்குறிப்பு ஏற்ற
அணி அமையப் பாடியிருப்பதை அறியவும்.
இக்கருத்துக்களை மேற்கொண்டே
திரு பிள்ளை அவர்களும் சேக்கிழார் பெருமானார் கைகொட்டுதற்குரிய காரணங்களை “ஈன சமயத் தொடக்கெல்லாம்
ஒழித்தனம் எனக் கைதட்டுதலும்” என்றனர்.
சேக்கிழார் தம் திருவாக்கில்
மலவாதனை தீர்த்தலைப் பற்றிப் பாடிய இடங்கள் பல. இளையான்குடிமாற நாயனார் கீரையினைக் கல்லி
எடுத்ததை மொழியும் நிலையில் சேக்கிழார்,
|