பக்கம் எண் :

New Page 1

380

       சப்பாணிப் பருவம்

 

    “குழிநிரம் பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப் பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க” என்றும், திண்ணனார் தம் வேட்டையாடிச் செய்த செயல்களைக் கூறப் போவதாகக் குறிப்பிட வந்த இடத்து,

    “இவ்வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனிஇப்பால்
     மைவண்ணக் கருங்குஞ்சி வனவேடர் பெருமானார்
     கைவண்ணச் சிலைவளைத்துக் கான்வேட்டை தனி ஆடிச்
     செய்வண்ணத் திறம்மொழிவேன் தீவினையின் திறம்
                                            ஒழிவேன்

என்று பாடியிருத்தலின், அவர் மலச் செருக்கு ஒழித்தவர் என்பது தெரிகிறது அன்றோ? “தாள் சூடித் தீவினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரைச் செப்பி” என்றும் இவர் குறிப்பிட்டதையும் காண்க.  இந்தக் கருத்தில்தான் கை தட்டினர் என்பார் என்பதையே, ஆசிரியர் “மலச் செருக்கெலாம் ஒழித்தனம் தீர்ந்தது அவ்வாதை என்ற செப்பிக் கை தட்டுதலும்” என்றனர்.

    உண்மை அன்பர்கள், இந்திரபதவியையோ, பிரம்மன் பதவியையோ, திருமால் பதவியையோ சிறிதும் கருதார், வேண்டவும் வேண்டார்.  இக்கருத்தினை மணி மொழியார்,

        கொள்ளேன் புரந்தரன் மால்அயன்
            வாழ்வு குடிகெடினும்
        நள்ளேன் நினதடி யாரொட
            லால்நர கம்புகினும்
        எள்ளேன் திருவரு ளாலே
            இருக்கப் பெறின்இறைவா
        உள்ளேன் பிறதெய்வம் உன்னைஅல்
            லாதெங்கள் உத்தமனே 

என்று அருளியதைக் கொண்டும், கச்சியப்ப சிவாச்சாரியார்.