பக்கம் எண் :

New Page 1

 

       சப்பாணிப் பருவம்

381

    கோல நீடிய நிதிபதி வாழ்க்கையும் குறியேன்
    மேலை இந்திரன் அரசினைக் கனவினும் வெஃகேன்
    மாலயன் பெறுபதத் தையும் பெருளென மதியேன்
    சால நின்பதத் தன்மையே வேண்டுவன் தமியேன்

என்று அறிவித்துக் கொண்டதையும், சம்பந்த சரணாலயர்,

அண்டர்பொய் வாழ்வையும் அயன்பொய் வாழ்வையும்
விண்டுவின் வாழ்வையும் வெஃகி லேனியான்
தண்டைகள் அணிந்தநின் சரணத் தன்பையே
கொண்டிட வேண்டுவன் என்று கூறினான்

என்று உணர்த்தி இருப்பதையும் ஈண்டு ஓர்க.  இந்தக் கருத்துக்களையேதாம் “இந்திரன் மலர்க்கணான் தேந்துழாயவன் வாழ்க்கையும் நண்ணியஎழும் கருத்தும் தவிர்ந்தனம் என்று நாடிக் கை தட்டுதலும்” என்றனர்.

    சேக்கிழார் பல்வேறு இடங்களில் அரிய உபதேசங்களை அருளிச் செய்துள்ளனர்.

    “எல்லார்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத பொருள் உளதோ” என்று கூறி மக்களுக்கு உபதேசித்துள்ளனர் ; 

    ஊன்அ டைந்த உடம்பின் பிறவியைத்
    தான்அ டைந்த உறுதியைச் சாருமால்
    தேன்அ டைந்த மலர்ப்பொழில் தில்லையுள்
    மாந டம்செய் வரதர்பொன் தாள்தொழ

என்றும்,

        மலர்மிசை அயனும் மாலும்
            காணுதற் கரிய வள்ளல்
        பலர்புகழ் வெண்ணெய் நல்லூர்
            ஆவணப் பழமை காட்டி
        உலகுய்ய ஆண்டு கொள்ளப்
            பெற்றவர் பாதம் உன்னித்
        தலைமிசை வைத்து வாழும்
            தலைமைநம் தலைமை ஆகும்

என்றும் திருவருள் புரிந்த உபதேசங்களையும் காண்க.