பக்கம் எண் :

 

       சப்பாணிப் பருவம்

385

        தில்லை எல்லையில் வந்து வந்தெதிர்
            தெண்ட னாகவிழுந் தெழுந்து
        அல்லி சேர்கம லத்த டத்தினில்
            மூழ்கி அம்பல வாணர்முன்
        ஓல்லை சென்றுப ணிந்து கைத்தலம்
            உச்சி வைத்துளம் உருகிநைந்து
        எல்லை காணரி தாய பேரொளி
            இன்ப வாரியில் மூழ்கியே

        அடைய லார்புரம் நீறெ ழத்திரு
            நகைசெய் தன்றொரு மூவரைப்
        படியின் மேல்அடி மைக்கொ ளும்பத
            பங்க யங்கள் பணிந்துநின்று
        அடிக ளேஉன தடியர் சீர்அடி
            யேன்உ ரைத்திட அடிஎடுத்து
        இடர்கெ டத்தரு வாய்எ னத்திரு
            அருளை எண்ணி இறைஞ்சினார்

என்று சேக்கிழார் புராணம் கூறும்.

    இங்ஙன மெல்லாம் இவர் செய்ததனாலேயே ஈண்டு “நடனம் செய்வார் முனம் மதித்து நைந்து உருகிட நிற்றல் மதித்து” என்றனர்.  அதுபோது இவர்க்கு இறைவர் “உலகெலாம் என்று” அடி எடுத்துக் கொடுத்ததையும் அப்புராணம்,

        அலைபு னல்பகி ரதிந திச்சடை
            ஆட ஆடர வாடநின்று
        இலகு மன்றினில் ஆடு வார்திரு
            அருளி னால்அச ரீரிவாக்கு
        உலகெ லாம்என அடிஎ டுத்துரை
            செய்த பேரொலி ஓசைமிக்கு
        இலகு சீரடி யார்செ விப்புலத்
            தெங்கும் ஆகிநி றைந்ததால்

என்கிறது.

    இந்த உண்மையினை வெளிப்படுத்தவே ‘அவர் முதல் நல்க’ என்னும் தொடர் அமைந்துள்ளது.  சேக்கிழார் செய்யப்போகும் வாணிபமாம் பெரிய புராணம் இயற்றற்கு,