பக்கம் எண் :

என

 

       சப்பாணிப் பருவம்

387

என்று அருளிப் போந்தார்.

    சேக்கிழார் பெருநாவலராய்ப் பொலிந்தமையினால்தான், அனபாயச் சோழன் சீவகசிந்தாமணியில் ஈடுபட்டிருந்தும், அவனைத் தம் நாவன்மையால் அறிவு கொளுத்தித் தொண்டர் வரலாற்றைக் கேட்குமாறு செய்தனர்.  அவர் அரசனை நோக்கி “சமணர் பொய்ந்நூல் இது மறுமைக்கும் ஆகாது இம்மைக்கும் அற்றே வளருகின்ற சிவ கதை இம்மைக்கும் மறுமைக்கும் உறுதி” என்று உரைத்தருளினர்.  அவனும் “அந்தத் தூயகதை அடைவுபடச்சொல்லீர்” என்று கேட்டு கொண்டனன்.  இந்நிலைக்கு அரசனைக் கொணர்ந்தது நம் பெருமானாரது நாவன்மை  அன்றோ?   இது  கருதியே   இவர்   ஈண்டு   “நாவல்”    எனப் போற்றப் பட்டனர்.                                                   

(37)           

7.       உண்டல் உடுத்தல் மணத்தல் முதல்பல
           உன்னுபு நல்நயம்ஆர்
       உத்தம என்றடை ஆதுலர் எண்ணம்
           ஒருங்கு தெரிந்தனையார்
       தண்டல் இலாமகிழ் பூப்ப மலர்க்கைத்
           தலம்விரி யாதுகுவி
       தகுமொர் பழக்கம்முன் உள்ளது யாங்கள்செய்
           தவம்வறி தாம்கொல்லோ
       கண்டல் செறிந்த கருங்கடல் வண்ணன்
           கலிகெழு பாற்கடல்மேல்
       கண்துயில் வதுபொர வெண்சுதை தீற்றிய
           காமரு மாளிகைமேல்
       கொண்டல் உறங்கும் குன்றத் தூரன்
           கொட்டுக சப்பாணி
       கொற்றச் சேவையர் காவல நாவல
           கொட்டுக சப்பாணி

    [அ.செ,]  உன்னுபு - எண்ணிக்கொண்டு, நயம் - அன்பு, நீதி, ஆர் - பொருந்திய, ஆலர் - ஏழைகள்,