New Page 1
“எந்தையே கந்தர் தந்தா இளைத்தனன்
பொருளோ இல்லை
மைந்தனுண் டாக
என்னை மன்றல்செய்
வித்தல் வேண்டும்
என்று வேண்டியதாகக்
கூறுகின்றது.
இங்ஙனம் வேண்டுவார்
எண்ணங்களை அறிந்து, அவர் கட்டு ஈகின்ற சிறப்பினைப் பெற்ற குலம் வேளாளர் குலம் ஆகும்.
வேளாளர் குலம் பிறர்வேண்டுவதை
ஈயும் பண்புடைய குலம் என்பதை மானக்கஞ்சாற நாயனார் செய்கை மூலமும் அறிந்து கொள்ளலாம்.
இவர் வேளாளர். இவரது திருமகனார்க்குத் திருமணம் நடக்கும் மணப்பந்தலில் மாவிரத முனிவர் வந்துற்று,
அம் மணமகளாரது கூந்தல் அழகைக் கண்ணுற்று, இக் கூந்தல் மயிர், தமக்குப் பஞ்சவடிக்குப் (மயிரப்
பூணலுக்கு) பெரும் பயனாகும் என்று மானக் கஞ்சாற நாயனாரைக் கேட்டபோது, வேளாளர் மரபினரான நாயனார்
சிறிதும் தயங்காமல் அதனை ஈந்து விட்டனர், இதைச் சேக்கிழார்.
அருள்செய்த மொழிகேளா
அடல்சுரிகை தனைஉருவிப்
பொருள்செய்தாம் எனப்பெற்றேன்
எனக்கொண்டு பூங்
கொடிதன்
இருள்செய்த கருங்கூந்தல்
அடியில்அரிந் தெதிர்நின்ற
மருள்செய்த பிறப்பறுப்பார்
மலர்க்கரத்தின் இடைநீட்ட
என்றறிவித்துள்ளனர்.
குறிப்பு அறிந்து
ஈயும் இயல்பினர் வேளாளர், என்பதையும் சேக்கிழார்,
மாரிக் காலத் திரவினில்
வைகிஓர்
தாரிப் பின்றிப்
பசிதலைக் கொள்வது
பாரித் தில்லம்
அடைந்தபின் பண்புற
வேரித் தாரான்
விருந்தெதிர் கொண்டனன்
|