ஏ
ஏழு புரவி என்பது
சூரியனது குதிரை யாகிய “ சப்தா “ என்னும் பெயருடைய குதிரை ஆகும். முன்னைய ஏழு என்பது ஏழு என்பதையும்,
பின்னைய ஏழு என்பது எழுகின்ற என்னும் பொருளையும் தருதல் காண்க.
எறிபத்தநாயனார்
தம் கையில் மழுவேந்திச் சிவனடியார்கட்குத் தீங்கு செய்வார் எவராயினும் அவரை வெட்டும் வீர
தீரமுடையவர். ஆதலின் அவரை “மலைமலிபுயத்தர்“ என்றனர். திரண்டு உருண்டு பருத்த தோளுக்கு
மலை உவமை. எறிபத்தர் முதல் எழுவோர் ஆவோர், எறிபத்தர், ஏனாதி நாதர், கண்ணப்பர்,
குங்கிலியக்கலயர், மானக்கஞ்சாறர், அரிவாள்தாயர், ஆனாயர்.
எறிபத்தர்,
கருவூர் ஆன்நிலையில் உள்ள சிவபெருமானை வழிபட்டவர். கையில் மழு உடையவர். சிவனடியார்கட்குத்
தீங்கு இழைப்பவர்களை அதுகொண்டு வெட்டி வீழ்த்துபவர். ஒருமுறை திருக்கோயிலுக்கு மாலை கொண்டு
சென்ற சிவகாமி ஆண்டார் என்பவரை அரச யானை தள்ளி, மலரையும் மிதித்தது. அது கண்ட எறிபத்தர்
அதனைத் தம் மழுவால் வெட்டினார். அரசன் இவர் அருகில் வந்து விசாரித்தபோது, தாம் யானையை
வெட்டியதன் காரணம் கூறச் சோழ மன்னன், ஆனையின் குற்றத்திற்குக் காரணன் நானே என்று தன்னையும்
கொன்றுவிட வேண்ட, அவனது அன்பை அறிந்த நாயனார் தம்மையே மாய்த்துக்கொள்ள முயன்றார்.
அரசன் தடுத்தான் ; ஆண்டவன் இருவர்க்கும் திருவருள் புரிந்தான்.
ஏனாதிநாதர்
சோழ நாட்டின் எயினனூரில் ஈழகுலச் சான்றோர் ஆவர். திருநீறு இட்டாரைப் போற்றுபவர் அரசர்க்கு
வாள் வித்தை பயிற்றுவது அவர் தம் தொழில். அதனால் பெரும் பொருளைப் பெற்றுச் சிவனடியார்க்கு
ஈந்தவர். அதீசூரன் என்பவன் ஒரு படை வீரன். நாயனார் மீது பொறாமை கொண்டு வாட்போர் தொடுத்தான்.
ஆனால், தோற்றான். என்றாலும், நாயனாரை வஞ்சனையால் வெல்லத் திருநீறு அணிந்த நெற்றியை,
மறைத்துப் போரிட்டான். போர்க்களத்தில் மெல்ல திருநீற்றுப் பொலிவுடன் திகழ்ந்தான்.
அத் தோற்றத்தைக் கண்ட நாயனார் தயங்கிய.
|