ஈர
ஈர மேனியை நீக்கி
இடம்கொடுத்
தார இன்னமு தூட்டுதற்
காசையால்
தார மாதரை நோக்கித்
தபோதனர்
தீர வேபசித் தார்செய்வ
தென்என்று
கூற, அதுபோது அவர்தம்
மனைவியார்
செல்லல் நீங்கப்
பகல்வித் தியசெந்நெல்
மல்லல் நீர்முளை
வாரிக் கொடுவந்தால்
வல்ல வாறமு தாக்கலும்
ஆகும்மற்
றல்ல தொன்றறி யேஎன்
றயர்வுற
என்றதும், நாயனார்
மற்றம் மாற்றம்
மனைவியார் கூறலும்
பெற்ற செல்வம்
எனப்பெரி துள்மகிழ்ந்
துற்ற காதலி
னால்ஒருப் பட்டனர்
சுற்று நீள்வயல் செல்லத்
தொடங்குவார்
என்றும், அறிவித்திருப்பதைக்
காண்க.
இத்தகையவர் குலத்தில்
நந்தம் சேக்கிழார் பெருமானார் பிறந்துள்ளார். அவர் தம் குலப் பெருமைக்கேற்ப இலம் என்று
உரையாது ஈந்து வந்த பெருமையர். இதனை நன்கு அறிந்த ஆசிரியர் ஈண்டு “ ஆதுலர் எண்ணம் ஒருங்கு
தெரிந்து அனையார் தண்டல் இலா மகிழ்பூப்ப மலர்க் கைத்தலம் விரியாது குவிதல்” என்று குறித்துப்
பாடியுள்ளார். இவ்வாறு கொடுக்கும் இயல்பினரிடம் சென்று இரத்தலும் ஓர் அழகாகும் என்பதைத் திருவள்ளுவர்,
கரப்பிலார் நெஞ்சின்
கடன்அறிவார் முன்நின்று
இரப்பும்ஓர் ஏஎர்
உடைத்து
என்றனர்.
இங்ஙனம் இரக்கின்றவர்கட்குக்
கொடுக்கும் பண்பு குலமுடையவரிடத்தில்தான் உண்டு என்பதையும் திருவள்ளுவர்,
இலம்என்னும் எவ்வம்
உரையாமை ஈதல்
குலமுடையார் கண்ணே
உள
என்று அறிவுறுத்தினர்.
|