பக்கம் எண் :

New Page 1

 

       சப்பாணிப் பருவம்

403

தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத்தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்
இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்துய்ந்த படிவிரித்தார்

வேதகா ரணராய வெண்பிறைசேர் செய்யசடை
நாதன்நெறி அறிந்துய்யார் தம்மிலே நலம்கொள்ளும்
போதம்இலாச் சமண்கையர் புத்தர்வழி பழிஆக்கும்
ஏதமே எனமொழிந்தார் எங்கள்பிரான் சம்பந்தர்

எனக்கூறி ஆளுடைய, பிள்ளையாரின் போக்கிற்குரிய காரணங்களையும்,

    இத்தன்மை நிகழ்ந்துழி நாவின்மொழிக்
        கிறையாகிய அன்பரும் இந்நெடுநாள்
    சித்தம்திகழ் தீவினை யேன்அடையும்
        திருவோஇது என்றுதெருண் டறியா
    அத்தன்மையன் ஆய இராவணனுக்
        அருளும் கருணைத்திற மானஅதன்
    மெய்த்தன்மை அறிந்து துதிப்பதுவே
        மேல்கொண்டு வணங்கினர் மெய்யுறவே

எனக்கூறி ஆளுடைய அரசு அவர்களின் முறைக்குரிய காரணத்தையும் மொழிந்தருளினார்.  இவ்வாறெல்லாம் எடுத்து இயம்புதற்கு இவர் ஞானம் கைவரப் பெற்றிலர் எனில், எடுத்து இயம்ப ஒண்ணுமோ? ஒருகாலும் இயலாது.

    அப்பர் பெருமானார், அப்பூதி அடிகளார் தண்ணீர்ப் பந்தரிடை இருந்தவரை நோக்கி ‘எவ்விடத்தார்’ என்று வினவியபோது, வினவுவார் உள்ளக் கிடக்கையினை உணர்ந்து உடனே,

துன்றியநூல் மார்பரும்இத் தொல்பதியார் மனையின்கண்
சென்றனர்இப் பொழு ததுவும் சேய்த்தன்று நணித்
                                        தென்றார்

என அப்பருக்கு வேண்டிய குறிப்புக்கள் அனைத்தையும் ஒரு வினாவிற்கு விடையாகக் கூறியதைக் காணுமிடத்து, இவர்