பக்கம் எண் :

தம

404

       சப்பாணிப் பருவம்

 

தம் மனோதத்துவ சாத்திர ஞானத்தை-உளநூல் அறிவை-அறியலாம்.  இன்னோரன்ன காரணங்களினால் இவர் ஞானசிரியராயினார்.  பெரிய புராணத்தில் உபதேச முறையில் பல பாக்களைப் பாடி இருத்தலின் இவர் ஞானாசிரியராகத் திகழ்கின்றனர் என்றாலும் பொருந்தும்.

    சேக்கிழார் பிறந்தருளிய காரணத்தால் குன்றத்தூர் அகிலம் எல்லாம் புகழும் பெருமை பெற்றது என்பதை ஆசிரியர் இறுதியில் குறிப்பிட்டுள்ளனர்.                         

(40)

10.      நிலவிய நாகே சுரரினி தமர்தலின்
            நிகழ்தா கேசுரமாய்
        நீல்மணி மாடம் நிலாவலின் இந்திர
            நீல பருப்பதமாய்க்
        கலவிய செம்மணி மாடத் தால்ஒளி
            கால்அர தனகிரியாய்க்
        கருடப் பச்சை யில்ஆலியா வோரும்
            காண்மர கதமலையா
        உலவிய வெண்சுதை தீற்றும் இலால்ஓங்
            கொருகை லைக்கிரியாய்
        உத்தமம் ஆர்பல ஏதுவி னால்இனும்
            உரைதரு பற்பலவாய்க்
        குலவிய வளமார் குன்றத்தூரன்
            கொட்டுக சப்பாணி
        கொற்றச் சேவையர் காவல நாவல
            கொட்டுக சப்பாணி

    (அ. சொ.) நிலவிய-விளங்கிய, பொருந்திய, நாகேசரம்-திருநாகேஸ்வரம் என்னும் ஆலயம், நீல்மணி-நீலமணி, மாடம்-மாளிகை, திருப்பதி, இந்திர நீலப்பருப்பதம்-இந்திர நீலப் பருப்பதம் என்னும் தலம், கால-வீச, அரதன