பக்கம் எண் :

 

       சப்பாணிப் பருவம்

405

கிரி-இரத்தினகிரி, வாட்போக்கி, ஆலியாவோர்-கண்ணீர் சிந்தும் அன்பர்யாவரும், மரகதமலை-திருஈங்கோய்மலை, சுதை-சுண்ணாம்பு, தீற்றும்-பூசும், இலால்-வீடுகளால், ஒரு-ஒப்பற்ற, உத்தமம்-சிறப்பு, ஆர்-பொருந்திய, ஏதுவினால்-காரணத்தால், இனும்-மேலும், குலவிய-விளங்கிய.  உலாவிய-சூழஇருந்த

    விளக்கம் :  இப்பாடல் குன்றத்தூர் பல தலங்களின் சிறப்புக்களைப் பெற்றிருத்தலின், அவ்வத்தலங்கள்போல் விளங்குகின்றது என்பதை அழகுற எடுத்துக் காட்டுகிறது.  சேக்கிழார் பெருமானார் சோழ நாட்டில் உள்ள திருநாகேசுரத் தலத்தின்மீது அளவு கடந்த பற்றுக் கொண்டிருந்த காரணத்தால், தம் ஊராகிய குன்றத்தூரில் ஒரு கோயில் அமைத்து, அதைச் சுற்றித் திருமடவளாகமும் அமைத்துத் திருநாகேசுரம் என்று பெயர் இட்டு இங்கேயே வழிபட்டு வந்தனர்.  அந்தக் கோயிலை இன்றும் குன்றத்தூரில் காணலாம்.  சோழ நாட்டுத் திருநாகேசுரம் குன்றத்தூரில் துலங்கலின், “திகழ் நாகேசுரமாய்”என்றனர். இத்தலத்து இறைவர் திருப்பெயர் நாகேசுரர் என்பது.  தேவியார் மரகதவல்லி அம்மையார் திருநாகேச்சுரம் இரயில்வே ஸ்டேஷன் உண்டு.  அங்கிருந்து முக்கால் மைலில் இத்தலம் உளது.

    இந்திர நீலப்பருபதம் என்பது தேவாரம் பெற்ற வட நாட்டுத் தலங்களுள் ஒன்று.  ஆனால், இத்தலத்தை அடைதற்குரிய வழிவகைகளை அறிதற்கு இல்லை.  எப்போதும் மேகங்கள் கவிந்து நீல நிறமாகத் தோற்றம் அளித்தலின், இப்பெயர் பெற்றது.  இதுபோல நீலநிற மாளிகைகள் குன்றத்தூரில் இருத்தலின், குன்றத்தூர் இந்திர நீலப் பருப்பது போன்றது எனப்பட்டது.

    ரத்னகிரி என்பது திருவாட்போக்கி என்னும் பெயரிய தலமாகும்.  இது குழித்தலை ஸ்டேஷனில் இருந்து ஆறரை மைலில் உளது. செம்மணி மாடங்கள் குன்றத்தூரில் இருத்தலின், அது ரத்னகிரி போன்று விளங்கியது எனப்பட்டது.